கரோனா தொற்று தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற களப் பணியாளர் கரோனா பாதிப்புக்குள்ளாவது வேதனையளிப்பதாக பலர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தொடர்ந்து காவலர்கள் கரோனா தொற்றால் அதிக அளவு பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 57 வயதான தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஓமந்தூராரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் திருவல்லிக்கேணி தீயணைப்பு துறை குடியிருப்பில் வசிப்பவர் என்று தெரியவந்துள்ளது.
இதே போல் கொத்தவால்சாவடி போக்குவரத்து காவலர் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சேத்துபட்டு போக்குவரத்து காவலர் ஒருவருக்கும், சூளைமேடு காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டுமின்றி ஐந்து காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாலையில் மயங்கிக் கிடந்த பெண்ணுக்கு தக்க சமயத்தில் உணவளித்த காவலர்கள்!