ETV Bharat / state

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் - தாயகம் திரும்பினர்!

author img

By

Published : Feb 18, 2022, 11:02 AM IST

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 47 தமிழ்நாடு மீனவா்கள் இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று (பிப். 18) சென்னை வந்தடைந்தனா்.

தமிழ்நாட்டிற்கு திரும்பிய மீனவர்கள்- இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்!

சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 47 போ், தமிழ்நாடு அரசு முயற்சியால் விடுவிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து விமானம் மூலம் இன்று (பிப்ரவரி 18) காலை சென்னை வந்தடைந்தனர்.

அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அலுவலர்கள் சென்னை விமானநிலையத்தில் வரவேற்று, தனி வேன்களில் ராமேஸ்வரம், புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றனர். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இயந்திரப் படகுகளில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது டிசம்பர் 18ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில், தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, அவர்களைக் கைது செய்தனர். அதைப்போன்று, அவர்கள் அதற்கு மறுநாளும் தமிழ்நாடு மீனவர்களைக் கைது செய்தனர்.

அடுத்தடுத்து இரண்டு தினங்களில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 56 மீனவர்களைக் கைது செய்து, 9 படகுகள், கடலில் பிடித்த மீன்கள், மீன்பிடி சாதனங்கள் போன்றவர்களையும் பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முதலமைச்சருக்குக் கோரிக்கை!

அடுத்தடுத்து இரண்டு நாள்களில் இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு மீனவர்களை ஒட்டுமொத்தமாக 56 பேரைக் கைது செய்தது மீனவக் குடும்பங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனவர்களின் விடுதலை குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியது. உடனடியாக மத்திய அரசும், தமிழிநாடு அரசும் மீனவர்கள் விடுதலைக்காக நடவடிக்கை எடுத்தது.

இதன்பின்னர், கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு மீனவர்கள் 56 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. 56 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அலுவலர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு மீனவர்களுக்கு கரோனா!

தமிழ்நாடு மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, இந்தியாவுக்கு அனுப்ப இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுத்தது. இதில், தமிழ்நாடு மீனவர்கள் பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.

அதனால் அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. கரோனா பாதிப்பிற்குள்ளான மீனவர்களுக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.அவர்களுடன் தொடர்பிலிருந்த மற்ற மீனவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே மீனவர்களின் குடும்பத்தினர், இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தியத் தூதரகம் நடவடிக்கை!

தமிழ்நாடு அரசும், மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்து மீனவர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம், கரோனா தொற்று பாதிப்பு இல்லாத ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை கடந்த 10ஆம் தேதி, விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கையில் இந்தியத் தூதரக பராமரிப்பிலிருந்த மற்ற மீனவர்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவருவதற்கு, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவந்தது. அதன்பேரில், கரோனா தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாகக் குணமடைந்திருந்த 47 மீனவர்களையும் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்க இந்தியத் தூதரகம் முடிவு செய்தது.

பாஸ்போர்ட் இல்லாததால் எமர்ஜென்சி சான்றிதழ்!

அவர்களுக்கு பாஸ்போா்ட் இல்லாததால், அனைவருக்கும் தூதரகம் எமா்ஜென்சி சா்டிபிகேட்கள் வழங்கியது. இதையடுத்து, 47 தமிழ்நாடு மீனவர்களும், இலங்கையிலிருந்து ஏா்-இந்தியா விமானத்தில் இன்று சென்னை சர்வதேச விமானநிலையம் வந்து சேர்ந்தனர்.

பாஸ்போா்ட் இல்லாமல் எமா்ஜென்சி சா்டிபிகேட்களில் மீனவர் வந்ததால், சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள், மீனவர்களிடம் நீண்ட விசாரணை நடத்தினர். அதன்பின்பு, மீனவர்கள் காலை 7 மணிக்கு மேல் சோதனைகள் முடிந்து பத்து பத்து பேராக வெளியே வந்தனர்.

சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அலுவலர்கள் மீனவர்களை வரவேற்றனர். அதன்பின்பு, ராமேஸ்வரம் மாவட்ட மீன்வளத்துறை அலுவலர்கள் மீனவர்களை வேன்களில் ஏற்றி அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:தாயகம் வந்தடைந்த இலங்கையில் விடுதலைசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.