சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற 6ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், மீன்வளத்துறை செயலர் கோபால், இயக்குநர் சமீரன், கூடுதல் மீன்வளத்துறை இயக்குநர்கள், மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் ஃபெலிக்ஸ், இணை மற்றும் துணை மீன்வள இயக்குநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது, 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. 110 விதியின் கீழ் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : அமராவதிக்கு நோ, விசாகப்பட்டினத்துக்கு எஸ் - பிசிஜி அறிக்கை