ETV Bharat / state

முன்னாள் மனைவியின் 2வது கணவரை அடித்து கொன்ற முதல் கணவர் கைது! - chennai murder

சென்னை அருகே புதுப்பேட்டையில் முன்னால் மனைவியின் இரண்டாவது கணவரை அடித்து கொன்ற முதல் கணவரை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் மனைவியின் 2வது கணவரை அடித்து கொன்ற முதல் கணவர் கைது!

author img

By

Published : Nov 8, 2022, 6:33 AM IST

சென்னை: புதுப்பேட்டையில் சாலையோரம் வசிப்பவர் பாஷா என்கிற சையது முகமது பாஷா(26), இவருக்கும் அமுதா(30) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, ஒரு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பாஷா அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் அமுதா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து விட்டார்.

இந்நிலையில் தேனாம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சர்க்கரை முகமது 32. என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் பெசன்ட் நகர் ஓடை குப்பத்தில் உள்ள தனது சித்தி வீட்டில் அமுதா ஒப்படைத்திருந்தார். அவ்வப்போது இரண்டாவது கணவருக்கு தெரியாமல் வந்து குழந்தைகளை பார்த்து விட்டு செல்வார்.

வழக்கம் போல இரவு ஓடை குப்பத்தில் வளரும் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக அமுதா வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட இரண்டாவது கணவர் சக்கரை முகமது, அமுதாவை பின் தொடர்ந்து வந்து அவரிடம் தகராறு செய்து அவரை அடித்து விட்டு, பெசன்ட் நகர் ஸ்கேட்டிங் மைதானம் அருகே தூங்கியுள்ளார்.

முன்னாள் மனைவியின் 2வது கணவரை அடித்து கொன்ற முதல் கணவர் கைது!

பின்னர் அதிகாலை அமுதாவின் முதல் கணவர் பாஷா- இரண்டாவது கணவர் சக்கரை முகமதுவை ஸ்கேட்டிங் மைதானம் அருகே இருப்பதை அறிந்து கொண்டார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த பாஷா, கீழே கிடந்த கற்களை எடுத்து சக்கரை முகமதுவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் காயமடைந்த சக்கரை முகமது ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று தான் கீழே விழுந்து விட்டதாகக்கூறி சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

மருத்துவர்கள் முதலுதவி செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். கீழே விழுந்து அடிப்பட்டு உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அமுதா காவல்நிலையம் சென்று தனது முதல் கணவரால் தான், சக்கரை முகமது அடித்து கொலை செய்யப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாஷாவை கைது செய்தனர். பாஷா மீது நான்கு திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சர்க்கரை முகமதுவின் முதல் மனைவியான ரம்ஜான் பேகம் தனது மகளோடு பிணவறைக்கு வந்து போலீசாரிடம் தனது கணவரின் உடலை வழங்கவேண்டும் என கேட்டுள்ளார். ஏற்கனவே அமுதா பிணவறையில் உடலை வாங்க காத்திருக்க , இருவரும் மாறி மாறி சண்டையிட்டு கொண்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது இருதரப்பு உறவினர்களும் இருவரையும் சமாதானம் செய்த நிலையில் முதல் மனைவியிடமே உடலை ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு? சம்பந்தப்பட்டவர் மீது பெற்றோர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.