கரோனா தொற்று நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் போராடும் களப் பணியாளர்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகின்றனர். குறிப்பாக, சென்னையில் காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் தொடர்ந்து கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி 50ஆவது வார்டில் சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த ஒருவருக்கு கரோனா தொற்று கடந்த மே 7ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை மோசமடைந்து நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்த முதல் சுகாதாரப் பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தமிழநாட்டில் கரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் 3 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!