சென்னை: பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் ஏறி நின்று கொண்டிருப்பதாக எஸ்பிளனேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டு எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் 35 வயது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் அரை நிர்வாணமாக ஒருவர் மின்கம்பியில் ஏறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வரதட்சணை தீயில் கருகிய விஸ்மயா- நடந்தது என்ன?