சென்னை பழைய பெருங்களத்தூர் சிவசக்தி நகரில் ஏழுமலை என்பவர் தனது வீட்டின் மாடியில் குடிசை வீடு அமைத்துள்ளார்.
இன்று (ஜன.1) புத்தாண்டு என்பதால் அவர் சாமி படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ குடிசையில் பற்றி எரிந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மளமளவென அருகே இருந்த 3 குடிசை வீடுகளில் தீ பரவியது. இதில் குழந்தை உட்பட நான்கு பேரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
தாம்பரம் தீயணைப்பு துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 4 குடிசைகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் சரவணன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பெட்ஷீட், புடவை, வேட்டி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.
இதையும் படிங்க: வானூரில் 12 குடிசை வீடுகள் தீயில் கருகி நாசம்!