சென்னை தி.நகர் ராமேஷ்வரன் தெருவில் அமைந்துள்ள ஜெயசந்திரன் பர்னிச்சர்ஸ் கடையில் இன்று காலை ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். தீபாவிளி பண்டிகையை முன்னிட்டு கடையில் அதிக கூட்டம் காணப்பட்டது.
அப்போது கட்டடத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த அசோக் நகர், தி நகர் தீயணைப்பு துறையினர் சுமார் 15 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.