சென்னை அண்ணா சாலையிலுள்ள மாச என்ற தனியார் தங்கும் விடுதி கட்டத்தில், உணவகம் அமைந்துள்ளது. இங்குள்ள சமையல் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. உணவகத்தின் பின் புறம் புகையை வெளியேற்றும் மின் விசிறியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ உணவகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு குறித்து தற்போது தகவல் இல்லை என உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.