ETV Bharat / state

உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி - வழிகாட்டுதல்கள் வெளியீடு! - உயர்கல்வி

உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி

author img

By

Published : Aug 8, 2022, 10:51 PM IST

சென்னை: உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி அளிக்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்துக்கு ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதில், “இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டம் மூலம் 6 லட்சம் மணவிகள் ஆண்டுதோறும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்த புதிய முயற்சிக்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சமூக நலத்துறையின் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு, பயனாளிகள் ஆன்லைன் மூலமும், அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பங்கள் மூலமும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு, அதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து சமூக நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வடிவமைப்பு, வங்கிக்கணக்கில் பணம் செலுத்துதல், பயனாளிகளின் தகுதி, தொகை, திட்ட மேலாண்மை, மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள், ஒற்றைச்சாளர சேவை உள்ளிட்டவை குறித்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி சமூக நலத்துறை இயக்குநர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக் கொண்ட அரசு, இயக்குநரின் கருத்துரு தொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளது.

  • அதில், '6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து, தமிழ்நாடு அரசு, மத்திய அரசு மற்றும் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள உயயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.
  • மேலும், அரசுப்பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று, 8, 9 மற்றும் 10ஆம் முடித்து டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
  • வேறு மாநிலத்தில் இருந்து எல்லை தாண்டி வந்து படிக்கும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
  • உயர்கல்வி என்றால் கலை மற்றும் அறிவியல், தொழிற்கல்வி படிப்புகள், பாராமெடிக்கல், பட்டயம், ஐடிஐ, ஒருங்கிணைந்த முதுநிலைக்கல்வி என அனைத்துக்கும் பொருந்தும்.
  • முதல் உயர்கல்விக்கு மட்டுமே உதவித்தொகை பெற முடியும். ஒருங்கிணைந்த முதுநிலைக்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். தொலைநிலைக்கல்வியில் உயர்கல்வி, அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயின்றால் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.
  • பாலிடெக்னிக் படிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள், ஐடிஐ சான்றிதழ் படிப்புகளுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டு, கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு 3 ஆண்டுகள், பொறியியல் - 4 ஆண்டுகள், வேளாண்படிப்புகள் - 4 ஆண்டுகள், மருத்துவம் - 5 ஆண்டுகள், சட்டம் மற்றும் பாராமெடிக்கல் படிப்புகள் - 3 முதல் 5 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெறமுடியும்.
  • அரசுப்பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவிகளில் யார் உயர்கல்வி பயில்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
  • இந்த உதவித்தொகையை பெற ஆதார் எண் கட்டாயம்.
  • பயன்பெற விரும்பும் தகுதியான மாணவிகள், தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்யலாம் அல்லது கல்லூரி வாயிலாகப் பதிவு செய்யலாம்.
  • இந்தத்திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஆன்லைன் மூலம் தகவல்களைப் பதிவு செய்யலாம்.
  • திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி மாணவிகளின் வங்கிக்கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.