ETV Bharat / state

வருமான சரிவை சீர் செய்ய சீர்திருத்தம் தேவை: நிதி அமைச்சர்

தமிழ்நாடு பெரிய வருமான சரிவில் உள்ளதாகவும், அதனை சீர் செய்ய சீர்திருததம் தேவை என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

வருமான சரிவில் உள்ளதைச் சரி செய்யச் சீர்திருத்தம் தேவை: நிதி அமைச்சர்

author img

By

Published : Mar 25, 2022, 12:40 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதி நிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை நேற்று (மார்ச்.24) நடைபெற்றது. அப்போது பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "அனைவருக்கும் அனைத்தும் போய் சேரும் திட்டம் தேவை. பயனாளிகளுக்கு ஒரே இடத்தில் சென்று சேறும் திட்டம் தேவை. முந்தைய அதிமுக ஆட்சியில் நிதி நிலை மிக மோசமான நிலையில் இருந்தது. வருவாய் துறையில் வருவாயை பெருக்கவும், சீரமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு நியமித்த நிபுணர் குழு உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலும் கிடையாது. அனைத்து தரப்பினரின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. தமிழ்நாடு அரசின் உலகளாவிய நிபுணர் குழுவில் அங்கம் வகித்த அனைவரும் வெவ்வேறு எண்ணம் கொண்ட உலகப் புகழ் பெற்ற நிபுணர்கள்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்

மேலும் நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் தமிழ்நாடு அரசியல்வாதிகள் ஒரு ரூபாய் கூட வாங்காமல் தமிழ்நாட்டு மக்களுக்காக பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு பெரிய வருமான சரிவில் உள்ளது. எந்த அளவுக்கு கூட்டாட்சி தத்துவத்தில் மாநிலத்திற்கு உரிமை தேவையோ அதே அளவுக்கு உள்ளாட்சி நிர்வாகத்திலும் தேவை. இதற்கு சில சீர்திருத்தங்கள் தேவை" என கூறினார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம்

வருவாய் துறையில் வருவாயை பெருக்கவும் சீரமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இரண்டு ஐஆர்எஸ் அலுவலர்களை நியமிக்க ஒன்றிய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழு சேவை மனப்பான்மையுடன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் செயலாற்றி வருகிறது.அதுமட்டுமின்றி, அரசின் பல்வேறு துறைகளுடன் ஆலோசனை மேற்கொண்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம்/General Discussion on TN Budget - நாள்/Day 2 (22/03/2022)

    கடன் குறித்த தவறான தகவலுக்கு பதில் I Reply for Misinformation about debt.#TNBudget2022 #TNBudgetDebate2022 pic.twitter.com/iuFhGM3pA2

    — Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) March 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதில் உரையை வழங்கிய நிதி அமைச்சர்

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி ' - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் வரவேற்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.