தமிழ் ஆட்சி மொழி தொல்லியல் துறை அமைச்சர் தஙகம் தென்னரசை தமிழ் திரைப்பட இயக்குநர் வெங்கடேஷ் குமார் சந்தித்து பேசினார்.
அப்போது கு. கோதண்டபாணி பிள்ளை எழுதிய புத்தங்களை அன்பளிப்பாக அவர் அளித்தார். மேலும் அவரின் படைப்புகளை நாட்டுடமை ஆக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கு கோதண்டபாணி பிள்ளை மெட்ராஸ் மாகாணத்தின் உதவி ஆட்சியாளராகவும், அயல்நாடு செல்கை கட்டுப்பாட்டாளராகவும் பணிபுரிந்தார். அவர் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 'காந்தி அரையாடை பூண்ட மதுரைக்கு வந்தது பெருமை' - காந்தியின் பேத்தி