ETV Bharat / state

நடிகர் விமல் ரூ.5 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகார்: சினிமா தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது!

நடிகர் விமலிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், சினிமா தயாரிப்பாளர் சிங்காரவேலன் விருகம்பாக்கம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சினிமா தயாரிப்பாளர் சிங்கார வேலன் கைது
சினிமா தயாரிப்பாளர் சிங்கார வேலன் கைது
author img

By

Published : Apr 26, 2022, 6:57 PM IST

சென்னை: களவாணி, மஞ்சப்பை, கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர், விமல்(41). கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 'மன்னர் வகையறா' திரைப்படத்தின் மூலம் நடிகர் விமல் தயாரிப்பாளராக அறிமுகமானார். நடிகர் விமலின் ஏ3 சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளராக சிங்காரவேலன் இருந்து வந்தார்.

’மன்னர் வகையறா’ படத்தை தயாரிப்பதற்காக பைனான்சியர் கோபியிடம் இருந்து சிங்காரவேலன் மூலமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 கோடி ரூபாய் பணத்தை விமல் பெற்றுள்ளார். அப்போது விமலின் நிறுவனம் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி, அந்த வங்கிக்கணக்கை சிங்காரவேலன் நிர்வகித்து வந்துள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு: ’மன்னர் வகையறா’ திரைப்படம் ரிலீஸ் ஆனபின், விற்பனைத்தொகையை பைனான்சியர் கோபியிடம் கொடுத்து கடனை அடைப்பதாகவும், மீதமுள்ள பணத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவதாகவும் கூறி நடிகர் விமலிடம் பல பத்திரங்களில் சிங்காரவேலன் கையெழுத்து பெற்றுள்ளார். ஆனால், படம் நஷ்டம் அடைந்ததாகக்கூறி சிங்காரவேலன் பைனான்சியர் கோபிக்கு கடனைத்திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார்.

சினிமா தயாரிப்பாளர் சிங்கார வேலன் கைது
சினிமா தயாரிப்பாளர் சிங்கார வேலன் கைது

சிங்கார வேலன் கைது: இதையடுத்து, பைனான்சியர் கோபி, கடன்தொகை கேட்டு தொந்தரவு செய்துவருவதாகவும், சிங்கார வேலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நடிகர் விமல் கடந்தாண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக நடிகர் விமல் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவின்படி போரூர் பகுதியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது மோசடி உள்ளிட்டப் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் காவல்துறையினர் அவரை இன்று (ஏப்ரல் 26) கைது செய்தனர். ’மன்னர் வகையறா’ படம் தொடர்பாக சிங்கார வேலன், ஹேமா, கோபி, கங்காதரன் உள்ளிட்டோர் நடிகர் விமல் மீது தொடர்ந்து புகார் கொடுத்து வந்த நிலையில், இந்த வழக்கின் திருப்பமாக தயாரிப்பாளர் சிங்கார வேலன் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கத்து.

இதையும் படிங்க: 'நடிகர் விமலிடமிருந்து பணத்தை வாங்கி தாங்க' - கண்ணீர் விட்ட தயாரிப்பாளரின் மகள்; குவியும் புகார்கள்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.