சென்னை: மாநிலக் கல்லூரி கேண்டீன் அருகில் மாணவர்கள் மோதிக்கொள்வதாக, அண்ணா சதுக்கம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் காவலர்கள் கேண்டீன் அருகே சென்றனர்.
அப்போது, காவலர்களை கண்டதும் சில மாணவர்கள் தப்பி ஒடிவிட்டனர். அதில் இரண்டு மாணவர்களை மடக்கிப்பிடித்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மோதலுக்கான காரணம்?
அதில், ஒருவர் இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர் என்பதும், மற்றொருவர் எண்ணூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 17 வயது சிறுவனுக்கு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பம் போட்டுள்ளதாகவும், சேர்க்கை கிடைக்கவில்லை என்பதால் பேராசிரியர்களை சந்திக்க வந்துள்ளதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஒரு அடி நீளமுள்ள கத்தி மற்றும் பாட்டில்கள் இருந்தன. அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து சிறுவனிடம் விசாரணை செய்த போது, மாஞ்சா போடுவதற்காக பாட்டில்கள் வாங்கி செல்வதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தப்பியோடிய இரண்டாம் ஆண்டு மாணவர்களை பிடித்து விசாரணை செய்தால் மட்டுமே, மோதலுக்கான காரணம் தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'காதலை மறுத்த பெண்' கல்லூரி வளாகத்தில் கொடூரக்கொலை