ETV Bharat / state

50 ஆண்டுகள் பழமையான பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து

50 ஆண்டுகள் பழமையான பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த நேரத்தில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

பள்ளியின் சுவர் இடிந்து விபத்து
பள்ளியின் சுவர் இடிந்து விபத்து
author img

By

Published : Nov 24, 2022, 6:58 AM IST

சென்னை: சேப்பாக்கம் அடுத்த டாக்டர் பெசன்ட் சாலையில் என்.கே.டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச்சுற்றி சுமார் 15 அடி உயரமும், சுமார் 500 மீட்டர் நீளமும் கொண்ட சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கன மழை, தண்ணீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால் பள்ளியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளிக்குப் பின்புறம் உள்ள இருசப்பன் தெருவை ஒட்டிய சுமார் 50 மீட்டர் தொலைவு கொண்ட சுற்றுச்சுவர் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்தபோது குறிப்பிட்டப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

50 ஆண்டுகள் பழமையான பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விபத்து

எனினும், சுவர் இடிந்து விழுந்ததில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர் மற்றும் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் பகுதிகளைச்சேர்ந்த மீட்புப் படையினர் இடிந்து விழுந்த சுவரை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: விஜய்க்கு அபராதம் விதித்த போலீஸ்... பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.