சென்னை: வார விடுமுறை நாளான இன்று (ஜூலை 11) காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான பொதுமக்கள் மீன்கள் வாங்க குவிந்தனர். ஆனால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் குறைவாக இருந்ததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் குறைந்த எண்ணிக்கையில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றதாகவும், இதனால் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் மீன் வரத்து குறைவாக இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவிதத்னர்.
மேலும் வஞ்சிரம் கிலோ ரூ.1000, சின்ன சங்கரா கூடை ரூ.2000, கடம்பா கூடை ரூ.2000 என குறைவான விலையில் மீன்கள் விற்பனை ஆனது.
இதனிடையே காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: அம்மா குடிநீர் : மீண்டும் விற்பனை செய்ய கோரிக்கை