ETV Bharat / state

பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு கட்டணம் உயர்த்தப்படாது - அமைச்சர் கேபி அன்பழகன்! - இட ஒதுக்கீட்டு கட்டணம் உயர்த்தப்படாது

சென்னை: பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் கேபி அன்பழகன் கூறினார்.

fees-for-government-allotted-seats-in-engineering-courses-will-not-be-increased-minister-kp-anpalagan

author img

By

Published : Aug 26, 2020, 10:44 PM IST

சென்னை தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் கலந்தாய்வுக்கான சமவாய்ப்பு எண் வெளியிடும் நிகழ்ச்சி இன்று (ஆக.26) நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் சமவாய்ப்பு எண்ணை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

இதில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 437 மாணவர்கள் கட்டணம் செலுத்தியிருந்தனர். மாணவர்கள் கோரிக்கையை ஏற்று சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இதனால் 8501 மாணவர்கள் சான்றிதழ்களை கூடுதலாக பதிவேற்றம் செய்துள்ளனர். அதில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்தனர்.

கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்கள் உருவாக்கப்படுள்ளன.

அந்த மண்டலங்களில் இன்று முதல் வரும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் விளையாட்டு வீரர்கள் சான்றிதழ்களை சமர்ப்பித்து சரிபார்த்துக்கொள்ளலாம்.

விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 7ஆதேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். ஆனால் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் முடிவு செப்டம்பர் எட்டாம் தேதி வரை உள்ளது.

எனவே செப்டம்பர் 17ஆம் தேதி மாணவர்களின் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். கடந்த ஆண்டு 480 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் கலந்து கொண்டன.

இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 458 ஆக குறைந்திருக்கிறது. இந்த கல்லூரிகளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கான கல்விக் கட்டணம் இந்தாண்டு உயர்த்தப்படாது.

பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு கட்டணம் உயர்த்தப்படாது

ஆனால் தனியார் கல்லூரிகள் கட்டணத்தை உயர்த்த, கட்டணத்தை நிர்ணயக் குழுவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அது குறித்து கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்யும். இறுதித் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அரியர் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி எனவும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

படித்து முடித்து எத்தனை ஆண்டுகள் கடந்து இருந்தாலும் அரியர் வைத்திருந்து அந்தத் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அந்தத் தேர்வில் மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

மாணவர்கள் தேர்வினை எழுத தயார் நிலையில் இருந்தாலும் தற்போதைய கரோனா வைரஸ் சூழ்நிலையால் தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது.
மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை அரசாணையாக விரைவில் வெளியிடும்.

இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடத்துவது குறித்து நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அரசு முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:பள்ளியில் அதிக கட்டணம் கேட்பதாக பெற்றோர் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.