சென்னை: அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தனியார் பள்ளிக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்கும்.
அதன் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கட்டணம் அரசால் வழங்கப்படும்.
கடந்த 2020-21ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா அறிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த ஆண்டில் படித்த மாணவர்களுக்கான நிதியை தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கும்.
வகுப்பு | கல்விக் கட்டணம் |
எல்.கே.ஜி யு.கே.ஜி 1ஆம் வகுப்பு | 12 ஆயிரத்து 458 ரூபாய் 94 பைசா |
2ஆம் வகுப்பு | 12 ஆயிரத்து 449 ரூபாய் 15 பைசா |
3ஆம் வகுப்பு | 12 ஆயிரத்து 578 ரூபாய் 98 பைசா |
4ஆம் வகுப்பு | 12 ஆயிரத்து 548 ரூபாய் 83 பைசா |
5ஆம் வகுப்பு | 12 ஆயிரத்து 831 ரூபாய் 29 பைசா |
6ஆம் வகுப்பு | 17 ஆயிரத்து 77 ரூபாய் 34 பைசா |
7ஆம் வகுப்பு | 17 ஆயிரத்து 106 ரூபாய் 62 பைசா |
8ஆம் வகுப்பு | 17 ஆயிரத்து 27 ரூபாய் 35பைசா |
மேற்குறிப்பிட்டுள்ள கட்டணம் 2019-20ஆண்டைவிட மிகவும் குறைவு. எல்கேஜி முதல் ஏழாம் வகுப்பு வரையில் அதிகபட்சமாக 18 ரூபாய் வரை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பில் கடந்த ஆண்டைவிட 956 ரூபாய் மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இதையும் படிங்க: தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் - பெற்றோர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்