ETV Bharat / state

புதிய வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு முழவதும் நடந்த போராட்டங்கள்! - farmers protest

புதிய வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

trichy farmers protest  புதிய வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டம்  agri bill protest  farmers protest  agri bill farmers protest
புதிய வேளாண் மசோதா திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு முழவதும் நடந்த போராட்டங்கள்
author img

By

Published : Sep 25, 2020, 7:59 PM IST

புதிய வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், விவசாய சங்கங்கள் போராட்டத்தை நடத்திவருகின்றன.

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் தங்களது கைகளை சங்கிலியால் கட்டிக்கொண்டும் கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டும் அரை நிர்வாணப்போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அடிமையாகளாக மாறுவதை தடுக்க புதிய வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

trichy farmers protest  புதிய வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டம்  agri bill protest  farmers protest  agri bill farmers protest
அய்யாகண்ணு தலைமையில் திருச்சியில் நடைபெற்ற போராட்டம்

அரியலூர்: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு விவசாயிகளின் வயிற்றில் நடிப்பதை கண்டித்து விவசாயிகள் தங்கள் வயிற்றை கட்டி கொண்டு முழக்கமிட்டனர். மேலும், எம்எஸ் சாமிநாதன் அறிக்கையினை அமல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முன்வர வேண்டுமெனவும் முழக்கமிட்டனர்.

அரியலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

விழுப்புரம்: புதிய வேளான் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இன்று அனைத்து விவசாயிகள் சங்க சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி. சரவணன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பல்வேறு இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரத்தில் நடைபெற்ற சாலை மறியல்

பெரம்பலூர்: அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பெரம்பலூரில் வேளாண் மசோதாக்களை எதிர்த்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் உருவபொம்மையை விவசாயிகள் செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இம்மறியலில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை மறியல்

சேலம்: சேலம் கோவை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இதனால், சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் , பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட 7 இடங்களில் வேளாண் மசோதாவை எதிர்த்துப்போராட்டம் நடத்தப்பட்டது.

சேலத்தில் நடைபெற்ற போராட்டம்

சென்னை: தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்துப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, சிலர் சாலையில் அமர்ந்துப் போராடத்தொடங்கினர். இதனால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

திருப்பூர்: புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்: கோவை சாலையில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இம்மறியல் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி: தென்காசி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம்

திருவாரூர்: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாய குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திருவாரூர் பேருந்து நிலையம் முன்பு வேளாண் மசோதா நகலை எரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் தஞ்சாவூர் -நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அரை மணி நேரத்திற்க்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

திருவாரூர் போராட்டக்களம்

விருதுநகர்: மதுரை சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகில் புதிய வேளாண் மசோதாக்களைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை: விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் வேளாண் திருத்தச் மசோதாக்களை எதிர்த்து சாலை மறியல் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, விவசாயிகள் அரைநிர்வாணத்தில், மண்வெட்டி ஏந்தியபடி இரும்புச் சங்கிலியால் தங்களைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.

கோவையில் நடைபெற்ற போராட்டம்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையம் முன்பு புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் வேளாண் மசோதாக்கள் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேபோல், ஈரோடு பேருந்து நிலையம் முன்பு அச்சங்கத்தினர் வேளாண் மசோதா நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்

திருவள்ளூர்: சோழவரத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூரில் நடந்த போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி கடைவீதியில் வேளாண் மசோதாக்களுக்கு எதிரான சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், பங்கேற்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருவண்ணாமலை: அறிவொளி பூங்கா அருகே அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் இணைந்து நடத்தி சாலை மறியல் மற்றும் மசோதாக்களின் நகல் எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

திருவண்ணாமலையில் நடந்த சாலை மறியல் போராட்டம்

கடலூர்: கடலூர் லாரன்ஸ் சாலையில் புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிரான சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதில், கலந்துகொண்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடலூரில் சாலை மறியிலில் ஈடுபட்ட இயக்கத்தினர்

தஞ்சை: தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக்குழு மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் புதிய வேளாண் மசோதாகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் வேளாண் மசோதாக்களின் நகல் எரிக்கப்பட்டது.

வேலூர்: புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில், சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கண்டன முழக்கங்களை எழுப்பிய சிலர், சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி: தேனியில் புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியவாறு வாழைக்கன்று, கரும்புடன் பார்வேர்டு பிளாக் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: வேளாண் மசோதா: காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சட்ட நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.