ETV Bharat / state

நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் சூரியின் ரசிகர்கள் - சூரியன் ரசிகர்கள் மன்றம்

சென்னை : நகைச்சுவை நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

சூரியின் பிறந்தநாள்
சூரியின் பிறந்தநாள்
author img

By

Published : Aug 28, 2020, 12:40 PM IST

தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் நடிகர் சூரி. இவர் தனது பிறந்தநாளை நேற்று (ஆக. 27) கொண்டாடினார். சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது நற்பணி மன்றக் கிளைகள் சார்பாக ரத்த தான முகாம் நடத்துதல், மரக்கன்றுகள் நடுதல், புத்தாடை - இனிப்புகளை வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டனர்.

மதுரை அம்மன் சைவ உணவக வளாகத்தில் சூரியின் சகோதரர் லட்சுமணன் தலைமையிலும், சென்னையில் சூரி நற்பணி இயக்கத்தின் சார்பாக ஆதீஸ்வரன் தலைமையிலும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக, கரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மதிய உணவு வழங்கினர்.

அதேபோல், நாகர்கோவிலில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கினர். பாண்டிச்சேரியில் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. தருமபுரி, கரூர் மாவட்டங்களில் நற்பணி இயக்கம் சார்பாக அரசு மருத்துவமனைகளில் ரத்த தான முகாம் நடைபெற்றது

கடலூர், தருமபுரி மாவட்டங்களில் நற்பணி இயக்கம் சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு, புத்தாடைகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் ஆதரவற்றோருக்கு இனிப்புகள், மதிய உணவு வழங்கப்பட்டன.

மதுரை, பாண்டிச்சேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், சானிடைசர்களும் வழங்கப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.