சென்னை: ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை ரயில்வே யார்டு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற காக்கா தோப்பு பாலாஜி, அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். இதில் அவருடைய கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை கைது செய்த காவல் துறையினர், முதலுதவிக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை முடிந்த பின், அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றம் முன் நிறுத்தினர்.
மேலும் அவருக்கு கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள குற்றவாளிகள் வார்டில் அனுமதித்து சிகிச்சை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரவின் பேரில் காக்கா தோப்பு பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் மீது கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நக்சல் தலைவர் கே. மோகன் ராவ் உயிரிழப்பு: தண்டகாரண்யம் காட்டில் இறுதிச் சடங்கு!