சென்னை: அகில இந்திய வானொலி மூலம் பிரபலம் அடைந்தவர் செய்தி வாசிப்பாளர் நாராயண சுவாமி. இவரது கம்பீர குரலானது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஒலிபரப்புத் துறையில் அவர் செய்த ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக 2008ஆம் ஆண்டில் அவருக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சரோஜ் நாராயணசாமி அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளராவார். ஒலிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாக இருந்தார். 35 ஆண்டுகள் பணியிலிருந்தார். இதுமட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இந்திரா காந்தி உள்பட சில பிரதமர்களிடம் பேட்டி எடுத்துள்ளார். இவரது மறைவு ஒரு பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது.