சென்னை, கோட்டூர்புரத்தை சேர்ந்த தொழிலதிபர் கமாலுதீன். இவர் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஷாகின் பேகம் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கமலாலுதீன் மற்றும் ஷாகின் பேகம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மற்றொரு பெண்ணுடன் கமலாலுதினுக்கு தொடர்பு இருப்பதாகவும், சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள தனது சகோதரரான தொழிலதிபர் மகபூல் பாட்ஷா வீட்டிற்கு வந்துள்ளார்.
அன்று வீட்டில் இருந்த நகைகள் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்ததாகவும், அதை கேட்க கமாலுதீன் வரும்போது ஷாகின் பேகம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அவதூறாக பேசி தாக்கி அவமானப்படுத்தியதாக புகார் ஒன்றை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் கமாலுதீன் அளித்துள்ளார்.
குறிப்பாக மகபூப் பாஷா துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரில் ஷாகின் பேகம் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் முதல் 70 வயது பெரியவர் வரை மொத்தம் 13 பேர் மீது ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் ஷாகின் பேகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கணவர் கமாலுதீன் மீதும் புகார் அளித்துள்ளார். தன்னை கணவர் கமாலுதீன் ராயப்பேட்டை வீட்டுக்கு வந்து துப்பாக்கியை காட்டி தன்னையும், தன் குடும்பத்தினரையும் மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். கணவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ஆடியோ போட்டோ மற்றும் சிசிடிவி ஆதாரங்களை காவல்துறையிடம் அளித்துள்ளார்.
மேலும் கமலாலுதின் திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளராக இருப்பதாலும், அமைச்சர் துரைமுருகன் பெயரை பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாகவும் காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியாது என மிரட்டியதாகவும் ஷாகின் பேகம் தெரிவித்துள்ளார்.
தன்னையும் தன் குடும்பத்தினரையும் துப்பாக்கி காட்டி மிரட்டிய கணவரிடமிருந்து பாதுகாப்பு தருமாறும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இரு தொடர்பாக கமாலுதீன் தரப்பில் தெரிவிக்கையில், தேவை இல்லாமல் தன்னை சந்தேகப்படுவதாகவும் நகை மற்றும் பொருட்களுடன் தன்னுடைய செல்போனையும் எடுத்துச் சென்றதால் மட்டுமே தான் ராயப்பேட்டை வீட்டிற்கு பொருட்களை திரும்ப வாங்க சென்றதாகவும், தான் மிரட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த குடும்ப பிரச்சினை தொடர்பாக பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சமாதானம் பேசினாலும் உடன்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்கள் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்: ஆ.ராசா