ETV Bharat / state

நிர்மலா சீதாராமன் கூறியதாக வெளியான போலியான செய்தி.. நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் போலியான டிஜிட்டல் கார்டை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Apr 6, 2022, 11:27 AM IST

Tamil Nadu BJP advocate wing chief Paul Kanagaraj has lodged a complaint with Commissioner of Policefake information shared in name of Union Finance Minister Nirmala Sitharaman
நிர்மலா சீதாராமன் கூறியதாக வெளியான போலியான செய்தி

சென்னை: தமிழ்நாடு பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவரான பால் கனகராஜ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதனை தொடர்ந்து பால் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பொதுமக்களுக்கு எதிரான அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது போல் போலியான தனியார் தொலைக்காட்சிகளின் டிஜிட்டல் கார்டுகளை சில விஷமிகள் உருவாக்கிப் பரப்பி உள்ளனர்.

மேலும், இது வேண்டுமென்றே பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலியான தகவலை உருவாக்கியது யார் ? அவர்களின் நோக்கம் என்ன ? யாருடைய பின்புலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் கூறியதாக வெளியான போலியான செய்தி.. நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்

இதனையடுத்து, ஜனவரி மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அவதூறு பரப்பும் வகையில் போலியான டிஜிட்டல் கார்டு ஒன்றை பாஜக உறுப்பினரான கருணாகரன் என்பவர் டிவிட்டரில் பரப்பி உள்ளார். அதே பதிவை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவரான சி.டி நிர்மல் குமார் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் இது குறித்து உங்கள் விளக்கம் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, பொங்கல் தொகுப்பு குறித்து போலியான டிஜிட்டல் கார்டை பரப்பியதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி. நிர்மல்குமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்காமல் பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற மனுதாக்கல் செய்துள்ளார்" என்று வழக்கறிஞர் பால் கனகராஜ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மீது வழக்குப்பதிவு..

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.