ETV Bharat / state

போலி என்கவுண்டர் விவகாரம்: என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளைதுரைக்கு ரூ.3 லட்சம் பிடித்தம் - chennai

போலி என்கவுண்டரால் சுட்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்க காவல்துறையினருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

author img

By

Published : Oct 31, 2022, 11:11 PM IST

சென்னை: கடந்த 2010 பிப்ரவரி மாதம், மதுரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அப்போதைய உதவி ஆணையர் வெள்ளைதுரை, எஸ்ஐ, மற்றும் ஏட்டை தாக்கி, பைக்கில் தப்ப முயன்ற பல வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல்கள் கவியரசு, முருகன் என்ற கல்லு மண்டையன் ஆகியோரை வெள்ளைதுரை போலி என்கவுண்டர் நடத்தியுள்ளார் எனக் கூறப்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் எ.குருவம்மாள் மற்றும் எம். சீதாலட்சுமி ஆகியோர் இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். இந்நிலையில் ஆணையம் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வெள்ளைதுரை, கவியரசு மற்றும் முருகனை போலி என்கவுண்டர் சுட்டுக்கொன்றதாக கூறி அவருக்கு ரூ.3 லட்சமும், மற்ற காவல்துறையினர் தலா ரூ.1.5 லட்சமும் சுட்டுக்கொல்லப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த தொகையினை நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது. இதில் வெள்ளைத்துரை அளிக்கும் ரூ.3 லட்சம் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு குடும்பத்திற்கும், மீதமுள்ள ரூ.3 லட்சம் மற்றொரு குடும்பதிற்கும் கொடுக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது.

ஆதாரங்களை ஆய்வு செய்ததில், பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என கூறியுள்ள ஆணையம் வெள்ளைத்துரை, இறந்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவேன் என்று எச்சரித்த பிறகு, அசையாமல் இருக்க அவர்களின் இடுப்பு, தொடைகள் அல்லது கால்களுக்குக் கீழே சுடுவதற்குப் பதிலாக அவர்களின் மார்பில் ஏன் சுட்டார்? என்பதும் தெரியவில்லை என தெரிவித்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் தோட்டா உள்ளே நுழைந்து வெளியேறும் காயம் இருப்பதைக் காட்டுகிறது, இது புல்லட் பாயின்ட் ப்ளாங்க் ரேஞ்சில் (மிக அருகில்) சுட்டதை குறிக்கிறது. இறந்தவர்களைக் கொல்வதை மட்டுமே காவல்துறையின் நோக்கமாக இருந்தது என்பதை இது காட்டுகிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஆணையம் சாடியுள்ளது.

மேலும் வெள்ளைதுரை, தான் இதுவரை என்கவுண்டர்களில் 4 மரணங்களைச் செய்திருப்பதாக ஒப்புக்கொள்கிறார். மாநிலத்தில் பல பிரபல குற்றவாளிகள் ஏன் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று தெரியவில்லை என ஆணையம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: 'நேர்மையாக இருப்பதென்பது அவ்வளவு எளிதல்ல' - டிஜிபி சைலேந்திர பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.