ETV Bharat / state

ரூ.1 கோடி கொள்ளை - போலி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு போலீஸ் வலை! - 1கோடி

சென்னை: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என்று கூறி ரூ. 1.07 கோடி கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

1கோடி கொள்ளை
author img

By

Published : Mar 16, 2019, 12:15 PM IST

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதை சாதமாக பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் எனக் கூறி தனியார் கட்டுமான நிறுவன மேலாளரிடம் ரூ.1.07 பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் சைதாப்பேட்டையில் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் தண்டலத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தின்மேலாளராக பணிபுரிபவர் உதயகுமார்.இவர் வேப்பேரியில் உள்ள வங்கியில் தொழில் கடனாகரூ. 1.07 கோடி பெற்றுக் கொண்டுஅடையார் சாஸ்திரி நகரில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிற்கு காரில்சென்று கொண்டிருந்தார்.இவருடன் கணக்காளர் இளங்கோ , வேணுகோபால், ஆகியோரும் சென்றனர்.

இந்நிலையில் இவர்கள் சென்ற கார சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் சென்ற போது திடீரென பின்தொடர்ந்து வந்த கார் இவர்கள் சென்ற காரை வழிமறித்து நின்றது.மேலும் அந்த காரிலிருந்து வெளியே வந்த சிலர் " தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் "என்று அறிமுகம் செய்துக் கொண்டு,காரை சோதனை செய்தபோது பணம் இருந்தது தெரியவந்தது.

உடனே மர்மநபர்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி உதயகுமார் வந்த காரிலேயே அவர்களை கடத்தி சென்று பூந்தமல்லி அருகே வைத்து அடித்து உதைத்து ரூ. 1.07 கோடியை கொள்ளையடித்து சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த உதயகுமாரும், மற்றவர்களும் இது பற்றி உரிமையாளர்களிடம் தெரிவித்தனர்.மேலும் இதுகுறித்துசைதாப்பேட்டை காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என்று கூறி ரூ. 1.07 கோடி கொள்ளை*

சென்னை சைதாப்பேட்டையில் காஞ்சிபுரம் தண்டலத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தின்  மேலாளராக பணிபுரிபவர் உதயகுமார். 

இவர் வேப்பேரியில் தொழில் கடனாக  ரூ. 1.07 கோடி பெற்றுக் கொண்டு  அடையார் சாஸ்திரி நகருக்கு நிறுவனத்தின் உரிமையாளர் இல்லத்திற்கு காரில்  சென்று கொண்டிருந்தார்.

காருக்குள் மேலாளர் உதயகுமார், கணக்காளர் இளங்கோ , வேணுகோபால், ஆகியோர் உடன் பயணம் செய்து கொண்டுரிந்தனர்.

அப்பொழுது சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் கார் செல்லும்போது திடீரென மற்றொரு கார் ஒன்று அந்த காரை மறித்து நின்றது. 

அந்த மர்ம காரிலிருந்து வெளியே வந்த சிலர் தாங்கள் " தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் "என்றும்,  காரை சோதனையிட வேண்டும்" என்றும் கூறி சோதனை நடத்திய பொழுது பணம் இருந்தது தெரிந்தது.

உடனே அவர்கள் உதயகுமார் வந்த காரிலேயே கடத்தி சென்று பூந்தமல்லி அருகே அடித்து உதைத்து ரூ. 1.07 கோடியை கொள்ளையடித்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதிர்ச்சியடைந்த உதயகுமாரும் மற்றவர்களும் இது பற்றி உரிமையாளர்களிடம் தெரிவித்தனர். 

மேலும் இதுகுறித்து  சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுத்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் உண்மை தன்மை உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.