இதுகுறித்து ரேலா மருத்துவமனை இயக்குநர் ரேலா கூறியதாவது, "கரோனா பாதிப்பாளர்களுக்கு எக்மோ முக்கிய சிகிச்சையாக உள்ளது. கரோனா பாதிப்பால் 100 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலட்டர் மூலம் ஆக்சிஜன் அளித்தாலும் உடல் ஏற்றுக் கொள்ளாததால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதைத் தடுக்க எக்மோ மிஷின் மூலம் நுரையீரலை செயல்பட வைத்து உயிரைக் காப்பாற்றலாம்.
3 விழுக்காடு மக்கள் உயிரிழக்கும் நிலையில், எல்லா இடங்களிலும் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுப்பதில்லை. வெளிநாடுகளில் 80 வயதைக் கடந்தவர்களுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிப்பதில்லை. கரோனா சிகிச்சையளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் கண்டிப்பாக வென்டிலேட்டர் இருக்க வேண்டும். இளம் வயதினரை கரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்ற வென்டிலேட்டர் சிகிச்சை நல்ல வாய்ப்பாக உள்ளது.
வென்டிலேட்டர் சிகிச்சையால் காப்பாற்ற முடியாவிட்டாலும் எக்மோ சிகிச்சை மூலம் காப்பாற்றலாம். தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பாதிப்பு குறைந்துள்ளது. இந்த பாதிப்புகள் குறைய இன்னும் மூன்று மாதங்களாகும். கரோனாவுக்கு ரெமிடைசவர் மருந்து நன்றாக வேலை செய்கிறது. பிளாஸ்மா கொடுப்பது குறைந்து வருகிறது.
பிளாஸ்மா மீது தற்போது நம்பிக்கை இல்லை. கரோனாவால் நுரையீரல் மற்றும் ரத்தக் குழாய்களிலும் அடைப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மருந்துகள் மூலம் நல்ல வித்தியாசங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: பேரறிவாளன் தந்தைக்கு கோவையில் நாளை அறுவை சிகிச்சை