இது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
'தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவ படிப்பிற்கான தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது குறித்த அட்டவணை டிசம்பர் 3ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டப்பட்டது.
கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்வுக்கு அபராதத் தொகை இல்லாமல் விண்ணப்பம் அளிக்க ஜனவரி 7ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நல்லாட்சிக் குறியீட்டில் தமிழகம் முதலிடம்! - அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்