ETV Bharat / state

கோயில் கருவறை தெய்வங்களை வீட்டின் கருவறைக்கு கொண்டு வந்த கொண்டைய ராஜூ.. சென்னையில் 'சித்ராலயம்' ஓவியக் கண்காட்சி! - C Kondaiah Raju

கோவில்களின் கருவறைக்குள் இருந்த தெய்வத்தை ஓவியங்களாக வரைந்து வீட்டின் கருவறைக்குள் கொண்டு சென்ற கொண்டைய ராஜூ காலத்து ஓவியங்கள் சென்னையில் சித்ராலயம் என்ற பெயரில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 24, 2023, 10:51 PM IST

Updated : Apr 25, 2023, 6:03 PM IST

சென்னையில் 'சித்ராலயம்' ஓவியக் கண்காட்சி!

சென்னை: ஓவியங்கள் ராஜாக்கள் காலத்தில் வரையப்பட்டாலும் அவை மிகவும் நுட்பத்துடன் வரையப்பட்டு சாதாரண வீடுகளுக்கு கிடைக்காத நிலை இருந்தது. ஓவியங்கள் ரவி ராஜ வர்மாவிற்கு பின் சிவகாசியில் காலண்டர்களில் அச்சடிக்கப்பட்டு கிராம சுவாமி படங்களும் வீட்டின் சுவர்களில் அலங்கரிக்க துவங்கின.

இதுகுறித்து கொண்டைராஜுவின் பிரதான சீடர்களில் ஒருவரான டி.எஸ்.சுப்பையாவின் மகன் மாரீஸ்வரன் மற்றும் சென்னையை சேர்ந்த ஆய்வாளர் ரங்கையா முருகன் கூறும்போது, "ரவி ராஜா வர்மாவிற்கு பின்னர் ஓவியங்களை காலண்டர்களாக அச்சிட்டு வெளியிடுவதில் 1940ஆம் ஆண்டு முதல் சிவகாசி இருந்து வருகிறது. மதுரை விருதுநகர் சென்னை போன்ற நகரங்களில் அமைந்த வியாபாரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டிற்கான நாட்காட்டிகளில் தெய்வீகத் திரு உருவங்களோடு தொழில் விளம்பரத்தையும் அச்சிட்டு மக்களுக்கு வழங்கி தங்கள் நிறுவனத்தின் நன்மதிப்பையும் அதிகப்படுத்தினர்.

ரவி ராஜ வர்மா காலத்திற்கு பின்னர் கோவில்பட்டி ஓவியர்கொண்டைய ராஜூ மற்றும் அவரின் மாணவர்களான சுப்பையா ராமலிங்கம், மீனாட்சி சுந்தரம், சீனிவாசன் போன்றவர்கள் வரைந்த ஓவியம் கிராமங்களில் உள்ள கிராம சுவாமிகளையும் காலண்டரில் அச்சிட்டு அவர்களின் வீட்டிற்குள் கொண்டு சேர்த்தனர்.

குறிப்பாக கோவில்பட்டியை சுற்றியுள்ள தென் மாவட்டங்களில் இருக்கும் கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாணம், முருகன் வள்ளி தெய்வானை திருமணம், மாரியம்மன் கோமதி அம்மன், காந்திமதி அம்மன், குமரி பகவதி அம்மன் உள்ளிட்ட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தெய்வங்களை ஓவியங்களாக வரைந்து அவற்றை காலண்டரில் அச்சிட்டு வீடுகளுக்கு கொண்டு சேர்த்தனர்" என்றனர்.

தொடர்ந்து பேசிய அவர், "கோவில்பட்டி ஓவியங்கள் உடனே காய்ந்து விடும் தன்மை உடைய டெம்பரா கலர் மற்றும் போஸ்டர் கலரில் வரைந்து குறுகிய காலத்தில் கொடுத்தனர். மேலும் ஓவியங்களை வரைவதில் அவரவர்களுக்கும் ஒரு புதிய பாணியையும் அடுத்தவர்களை கவரும் வகையிலும் வரைந்து இருந்தனர். கோயிலின் கருவறையில் உள்ள மூலவர் உடன் இருக்கும் பிற தெய்வங்களையும் உள்ளே சென்று பார்த்து அவர்களையும் வண்ண காலண்டரில் கொண்டு வந்து மக்களுக்கு காண்பித்தனர். மேலும் இவர் தனது சீடர்களுக்கும் ஓவியத்தை கற்றுத் தந்தார்.

கோவில்பட்டியின் கலை படைப்புகள் சிராகஸ் பல்கலைக்கழகத்தில் சேகரித்து வைத்துள்ளனர். தென் ஆசிய கலைகளை ஆய்வு செய்து வரும் ஸ்டீபன் இங்கிலீஷ் இன்னும் கன்னடா நாட்டுக்காரர் கோவில்பட்டி ஓவியங்களை சேகரித்து வைத்துள்ளார். ஓவியங்களை பல்வேறு நிலைகளில் எவ்வாறு வரைந்து உள்ளார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வருங்காலங்களில் அவர்களுக்கு கோவில்பட்டி ஓவியங்கள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட உள்ளன.

தற்போது இந்த ஓவியங்களுக்குரிய முக்கியத்துவம் குறைந்து இருந்தாலும் அதனை மீண்டும் கொண்டு வரும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளியில் கல்வியின் இணை செயல்பாடுகளுடன் ஓவியக் கலையும் மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்கின்றனர். பெற்றோர்கள் மாணவர்களுக்கு கலைகளையும் கற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும்" கூறினர்.

இதையும் படிங்க: புழல் மத்திய சிறையில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார் வைரமுத்து!

Last Updated : Apr 25, 2023, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.