கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்களுக்கு மார்ச் 31ஆம் தேதிவரை தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவித்திருந்தாலும் அவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, கல்லூரி கல்வி இயக்குநர்கள், தொழில் கல்வி இயக்குநர்கள், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், "கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையின்படி உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனினும், இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். பல்கலைக்கழகத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் ஆகியவை திட்டமிட்டபடி நடைபெறும். இந்தத் தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் தொடர்ந்து இயங்கும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க; தாய் பாசத்திற்கு காலமும் தூரமும் தடை இல்லை! மகனின் உணர்ச்சி பயணம்!