ETV Bharat / state

வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வுகளுக்கான தேர்வு மையம், ஒதுக்கீடு செய்யப்பட்ட ஹால் டிக்கெட் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

beo_exam_center_hall_ticket
வட்டார கல்வி அலுவலர் மையத்துடன்ஹால் டிக்கெட்
author img

By

Published : Feb 11, 2020, 8:10 AM IST

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2018-19 ஆண்டில் வட்டார கல்வி அலுவலருக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வு வரும் 14, 15 ,16 ஆகிய தேதிகளில் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு உரிய அனுமதி சீட்டுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

கடந்த 7ஆம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மேலும் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தின் மாவட்டம், நகரம் மட்டுமே அறிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தேர்வர்கள் தங்களது தேர்வு நாளுக்கு, 3 நாள்களுக்கு முன்னர் தேர்வு மையத்தின் பெயரைத் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட்டார கல்வி அலுவலர் பணிகளுக்கான ஆன்லைன் போட்டி தேர்வு பிப்ரவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுத சுமார் 64 ஆயிரம் தேர்வர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுள் பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமே அவர்களது சொந்த மாவட்டத்தில் தேர்வெழுத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்விற்கு விண்ணப்பித்த 64,000 தேர்வர்களில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பெண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் வேறு மாவட்டத்திற்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது

Intro:வட்டார கல்வி அலுவலர் தேர்வு
மையத்துடன் ஹால் டிக்கெட் வெளியீடு

Body:
சென்னை,
வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்விற்கு தேர்வுகளுக்கான தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,2018-19 ஆண்டிற்கு வட்டார கல்வி அலுவலருக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வு வரும் 14, 15 ,16 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு உரிய அனுமதி சீட்டுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஏற்கனவே வெளியிடப்பட்டது. கடந்த 7ஆம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தின் மாவட்டம், நகரம் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது.
தற்போது தேர்வர்கள் தங்களது தேர்வு நாளுக்கு 3 நாட்களுக்கு முன்னர் தேர்வு மையத்தின் பெயரை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களின் பயனாளர் குறியீட்டு எண் மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் தேர்வு மையம் குறிப்பிட்டுள்ள நுழைவுச் சீட்டை கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நாளன்று தேர்வு மையத்துக்கு எடுத்துச் சென்று உரிய அறிவுரையைப் பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத வேண்டும்.

14ஆம் தேதி தேர்வு எழுதுபவர்களுக்கு 10ம் தேதியும், 15ஆம் தேதி தேர்வு எழுதுபவர்களுக்கு 11ம் தேதியும், 16ஆம் தேதி தேர்வு எழுதுபவர்களுக்கு 12ம் தேதியும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் கூறப்பட்டுள்ள மையத்திற்கு நேரம் மற்றும் அதில் கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடன் விண்ணப்பம் செய்யும் பொழுது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் தவறாமல் எடுத்து செல்ல வேண்டும்.

தேர்வு நடைபெறும் நாளான்று காலையில் நடைபெறும் தேர்விற்கு 7 மணி 30 நிமிடத்திற்குள்ளும், மதியம் நடைபெறும் தேர்விற்கு 12 மணி 30 நிமிடத்திற்குள்ளும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகை புரிய வேண்டும்.

மேலும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வட்டார கல்வி அலுவலர் 2018 -19 ஆண்டில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் ஜனவரி 9ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்கள் விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிப்பின் வழியாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனக் கூறியிருந்தது.

இந்தநிலையில் வட்டார கல்வி அலுவலர் பணிகளுக்கான ஆன்லைன் போட்டி தேர்வு பிப்ரவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை எழுத சுமார் 64 ஆயிரம் தேர்வர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு பெண்கள், கர்ப்பிணிகள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சொந்த மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்விற்கு விண்ணப்பித்த 64,000 தேர்வுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆண் தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் வேறு மாவட்டத்திற்கு
தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.