ETV Bharat / state

2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு - கால அட்டவணை வெளியீடு - ஆசிரியர்கள் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

2022ஆம் ஆண்டிற்கான தேர்வுக்குரிய கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (ஜன 23) வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு - கால அட்டவணை
ஆசிரியர் தேர்வு - கால அட்டவணை
author img

By

Published : Jan 23, 2022, 2:18 PM IST

சென்னை: பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் நடப்பாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 9 ஆயிரத்து 494 பணியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2ஆவது வாரத்தில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர்கள், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது.

அந்த வகையில் 2022ஆம் ஆண்டிற்கான தேர்வுக்குரிய கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (ஜன 23) வெளியிட்டுள்ளது.

அதன்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 2ஆயிரத்து 407 பேர் நியமனம் செய்வதற்கான தேர்வுகள் பிப்ரவரி 2 அல்லது 3ஆவது வாரத்தில் நடைபெறும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதம் 2ஆவது வாரத்தில் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

இடைநிலை ஆசிரியர் 3ஆயிரத்து 902, பட்டதாரி ஆசிரியர்கள் ஆயிரத்து 87 பணியிடம் என 4ஆயிரத்து 989 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் 2ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு 167 விரிவுரையாளர் தேர்விற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் 2ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 334 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல் கட்டச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 493 உதவி விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு, நவம்பர் 2ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும்.

பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்தில் 104 பேரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பர் 2ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9 ஆயிரத்து 494 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு உரிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வு - கால அட்டவணை
ஆசிரியர் தேர்வு கால அட்டவணை

போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இந்த உத்தேச கால அட்டவணை மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேலும், தேர்வர்கள் தாங்கள் விரும்பும் பணியிடங்களுக்கு முன்னுரிமை அளித்து விண்ணப்பம் செய்யவும், போட்டித் தேர்வுக்கு திட்டமிட்டு தயாராவதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூத்துக்குடி துறைமுக தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த கனிமொழி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.