ETV Bharat / state

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - தொடரும் குழப்பங்கள்

சென்னை: 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்களை குழப்பும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

exam 5, 8 probelam
author img

By

Published : Nov 19, 2019, 12:08 PM IST

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. மாதிரி கேள்வித்தாளும் வெளியிடப்படாமல் இருப்பதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 5 , 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விவகாரத்தைப் பொறுத்தவரை தற்போதுவரை குழப்பமான நிலையே நீடிக்கிறது. பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிட்டாலும்கூட, இதுவரை தேர்வு அட்டவணை வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் சேதுராம வர்மா, தேர்வு தொடர்பாக ஒரு அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருந்தார். அதில், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் மட்டும் அடிப்படை விஷயங்கள் குறித்து பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என ஐந்து பாடங்களிலும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், திருச்சியில் நேற்று நடந்த விளையாட்டுப் போட்டிகள் விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும் எனக் கூறியுள்ளார்.

இப்படி, இயக்குநர் ஒரு அறிவிப்பையும் அதற்கு மாறாக அமைச்சர் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருப்பது ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

சென்னையில் வாகன எண்களைக் கண்டறிய நவீன கேமரா!

Intro:5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு
தொடரும் குழப்பங்கள்
Body:

5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு
தொடரும் குழப்பங்கள்

சென்னை,

5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்களை குழப்பும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஐந்து பாடங்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஆனால் அமைச்சர் 3 பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் என தெரிவித்திருப்பது மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்பட்டுத்தி உள்ளது.

5,8 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. மாதிரி கேள்வி தாள் வெளியிடப்படாமல் மாணவர்கள் எந்த முறையில் இருக்கும் என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

5 , 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விவகாரத்தைப் பொறுத்தவரை தற்போது வரை குழப்பமான நிலையே நீடிக்கிறது . பொது தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிட்டாலும் கூட, இதுவரை தேர்வு அட்டவணை வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சேது ராம வர்மா , தேர்வு தொடர்பாக ஒரு அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருந்தார் .

அதில், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் மட்டும் அடிப்படை விஷயங்கள் குறித்து பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் , சமூக அறிவியல் என 5 பாடங்களிலும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இந் நிலையில், திருச்சியில் நேற்று நடந்த விளையாட்டுப் போட்டிகள் விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 5 , 8 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ,ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் மட்டும் பொதுத் தேர்வு நடைபெறும் என கூறியுள்ளார்.

இப்படி, இயக்குனர் ஒரு அறிவிப்பையும், அதற்கு மாறாக அமைச்சர் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு இருப்பது ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.