சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வதால் எங்களுக்கு எந்தவித விரோதமும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அவரது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். இதற்கு ஆளுநர்தான் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்பதால், என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் குற்றவாளிகள் ஏழு பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதை காங்கிரஸ் கட்சியின் கருத்தாக இருக்கிறது' என அவர் தெரிவித்தார்.