சென்னை: சமீபத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காமல் இருந்ததைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “தமிழ்நாடு மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது. அதற்காக சொல்லப்படும் காரணங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், 30 ஜிஎஸ்டி கூட்டத்தில் நான் பங்கேற்று உள்ளேன். ஒருமுறைகூட பங்கேற்காமல் இருந்ததில்லை.
நிதியமைச்சராக தனது கடமையை செய்யாமல் இருப்பது, தமிழ்நாட்டு மக்களுக்கு செய்கின்ற துரோகம் அல்லவா. தம்பி பழனிவேல் தியாகராஜன் கவனித்துக் கொள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிப்பார்'