ETV Bharat / state

மக்களை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை: காஷ்மீர் விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
author img

By

Published : Aug 27, 2019, 3:48 AM IST

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருவள்ளூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,

“நாட்டிலே இன்றைக்கு பொருளாதாரம் நசுக்கி கொண்டு வருகிறது. காஷ்மீர் மக்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய சுதந்திரம் பறிபோய் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்து மக்களை திசை திருப்ப வேண்டும், பழி வாங்க வேண்டும் என்கிற காரணத்தால் தான் சிதம்பரத்தை கைது செய்து மோடி கேடி வேலைகளை செய்து வருகிறார்.

இன்றைக்கு பல பெரிய கம்பெனிகள் மூடும் நிலைக்கு வந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சவரன் 30 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. பால் விலை மாநில அரசால் ஆறு ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் கீழே நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார மேன்மைக்கு ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் மற்றும் சிதம்பரம் ஆகிய நான்கு பேர் தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது, என்றார்.

மேலும், நாட்டின் நீதித்துறையே மோடி, அமித் ஷா பேச்சைக் கேட்டு செயல்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது” என்று தெரிவித்தார்.

Intro:Body:காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூத்த உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருவள்ளூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள கலந்துகொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

அப்போது பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “நாட்டிலே இன்றைக்கு பொருளாதாரம் நசுக்கி கொண்டு வருகிறது. காஷ்மீர் மக்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய சுதந்திரம் பறிபோய் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்து மக்களை திசை திருப்ப வேண்டும் பழி வாங்க வேண்டும் என்கிற காரணத்தால் தான் சிதம்பரத்தை கைது செய்து மோடி கேடி வேலைகளை செய்து வருகிறார்.

இன்றைக்கு பல பெரிய கம்பெனிகள் மூடும் நிலைக்கு வந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சவரன் 30 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. மக்களிடம் பண புழக்கம் இல்லை. மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். பால் விலை மாநில சர்காரால் ஆறு ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் கீழே நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எப்போது இந்த நாடு திவால் ஆகுமோ என்ற ஆச்சம் மக்களிடையே நிலவுகிறது. இது போன்ற அயோக்கிய தனமான செயல்களிலிருந்து மக்கலை திசை திருப்புவதற்கே சிதம்பரத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆரில் அவர் பெயர் கிடையாது என்று சொன்னார்கள். அப்படியே விசாரணைக்கு கூப்பிடும் நேரத்தில் அவர் சென்று கொண்டுதான் இருந்தார். விசாரணைக்கு வரமுடியாது என்று யாவரும் சொல்லவில்லை. ஆகவே அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதல்ல காங்கிரஸ் கட்சியை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதே இந்த கேடியின் நோக்கம். இதற்கெல்லாம் காங்கிரஸ் அஞ்ச போவதில்லை. ஆங்கிலேயரிடமே என்ன செய்தி என்று கேட்டவர்கள் நாங்கள். பல் உயிர்களை தியாகம் செய்து சுதந்திரத்தை பெற்று பல உயிர்களை பறிகொடுத்து பெற்ற சுதந்திரத்தை இந்த 50 ஆண்டுகாலமாக காப்பாற்றியும் வந்துள்ளோம். அந்த சுதந்திரத்தை கேடியிடமிருந்து காப்பாற்ற காங்கிரஸ் தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்றால் அதற்கு காங்கிரஸ் தயங்காது.

பாகிஸ்தானில் பிங்லேடனை பிடிக்க ஹெலிக்காப்டரிலிருந்து வீட்டு மொட்டை மாடியில் குதித்து கொன்றார்கள். சிதம்பரம் அது போன்ற பயங்கரவாதியா. நடுராத்திரியில் சுவர் எகிறி குதிக்கிறீர்களே வெட்கமாக இல்லை. எப்போதெல்லாம் தலைவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்படுகிறார்கலோ அப்பொதெல்லாம் நாட்டிலுள்ள பல தலைவர்கள் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஜெயிலலிதா ஆட்சியில் டாக்டர் கலைஞரை நள்ளிரவில் கைது செய்த போது சோனியா காந்தி லண்டனில் இருந்தார். இது தவறான அணுகுமுறை என்று அங்கிருந்து குரல் கொடுத்தார். அது இதற்கும் பொருந்தும் அல்லவா.

நீங்கள் தான் விஜய் மல்லையாவை நாட்டை விட்டு அனுப்பி வைத்தது. இன்னொரு மோடியை சுகமாக அனுப்பி வைத்ததும் நீங்கள் தானே. இத்தனையும் செய்துவிட்டு சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கிறீர்களே கொஞ்சமாவது உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா இல்லையா. இது போன்ற செயல்களால் காங்கிரஸ் கட்சியை ஒடுக்கிவிடலாம் என்று நினைக்கிறீர்களா. முடியாது மோடி அவர்களே. இவ்வாறு தொடர்ந்து நீங்கள் செய்து கொண்டிருந்தால் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் இல்லை நீங்கள் வெளிநாட்டில் குடிபெயர வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு ஏற்படும்.

சிதம்பரத்திற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் காங்கிரசை பலகீனப்படுத்த வேண்டும் என்பதே உங்களுடைய குறிக்கோளே தவிர சிதம்பரத்தை நீங்கள் சட்ட ரீதியாக சந்திக்க திறனற்றவர்கள் என்பதை காண்பித்துள்ளீர்கள். தர்மம கடைசியில் வெல்லும். எவ்வலவு தான் ஆடினாலும், எவ்வளவு தான் கோடி கோடியாக பணம் சேர்த்தாலும் கடையில் ஆறடி மண்ணுக்குள் தான் முடிகிறது. சில பேர் கடற்கரையில் போக வேண்டிய சூழ்நிலை. அங்கே ஒரு சொத்து இங்கே ஒரு சொத்து என்று எவ்வளவோ சேர்த்தார்கள். நினைத்தை முடித்தே தீருவேன். பார்த்ததை வாங்கியே தீர்வேன் என்று கங்கனம் கட்டி கொண்டு இருந்தார்கள். உயிரோடு இருந்தால் ஜெயிலுக்கு போயிருப்பார்கள். நல்லவேளை மேலே போனார்களா, கீழே போனார்களா என்பது தெரியவில்லை. போய்விட்டார்கள்.

இந்தியாவின் பொருளாதார மேன்மைக்கு ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் மற்றும் சிதம்பர்ம் ஆகிய நான்கு பேர் தான் காரனம் என்று சொன்னால் அது மிகையாகாது. காங்கிரஸ் கட்சியை சோனியா காந்தி, ராகுல் காந்தியை அவமானப்படுத்த வேண்டும் என்று சிதம்பரத்தை கைது செய்துள்ளனர். சோனியா மற்றும் ராகுல் காந்தி மீதும் கேஸ் போட்டுள்ளனர். எல்லார் மீதும் கேஸ் போட்டுள்ளனர். கேஸ் போட்டு போட்டு கடைசியில் இவர்களே ஒரு கேஸாக போய்விடுவார்கள்.

நீதியரசர் தீர்ப்புகளை வழங்கலாம் பதிலாக கருத்து கூற முடியாது. கிங்பின் என்று கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் நீதித்துறையே பா.ஜ.க, மோடி, அமித் ஷா பேச்சைக் கேட்டு செயல்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது” என்று தெரிவித்தார்.`Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.