ETV Bharat / state

கவுந்துபடுத்தால் கரோனாவை வெல்ல முடியுமா? - கரோனா குறித்த விரிவான பார்வை

மூச்சுத் திணறல் ஏற்படுவர்கள் கவுந்துபடுத்து தூங்கும் பொழுது நுரையீரல்கள் விரிவடைந்து ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. இதனை கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைப்பதாக விளக்குகிறார், மருத்துவ பேராசிரியர் பரந்தாமன். ஆனால் எந்த நிலையில் இருப்பவர்களுக்கு இச்சிகிச்சை முறை ஏற்றது என்பதை மருத்துவரே முடிவுசெய்வார் எனவும் அவர் அறிவுறுத்துகிறார்.

மருத்துவர்
மருத்துவர்
author img

By

Published : Jun 10, 2020, 4:13 PM IST

Updated : Jun 10, 2020, 6:20 PM IST

கரோனா பெருந்தொற்றுக்கு அரசு அளிக்கும் சிகிச்சை குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ பேராசிரியர் பரந்தாமன் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அவரின் உரையாடல் கரோனா குறித்த அநேக சந்தேக முடிச்சுக்களை அவிழ்க்கிறது.

ஆரம்ப காலக்கட்ட கரோனா பரவலை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டால் அதனுடைய வீரியம் எந்த அளவில் இருக்கிறது?

கரோனா பரவத் தொடங்கிய 3 மாதத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் சுமார் 100 பேருக்கு மேல் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் 200 பேர் சிகிச்சைப் பெற்றனர். ஆரம்பத்தில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் காணப்பட்ட வைரஸின் செயல்பாடுகளுக்கும் தற்பொழுது பாதிக்கப்பட்டு வருபவர்களிடம் காணப்படும் வைரஸின் செயல்பாடுகளும் வேறுபடுகிறது. இதில் கிளேட் ஏ 131-ஐ வகை வைரஸ் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

ஆரம்பத்தில் பெரும்பாலானோர் சாதாரண அறிகுறியுடன் மட்டுமே சிகிச்சைக்காக வந்தனர். 300 நோயாளிகளில் ஒரு 20 விழுக்காடு பேர் மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படுவோராயிருந்தனர். ஆனால் தற்பொழுது 470 நோயாளிகளில், 100 நோயாளிகள் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களாக உள்ளனர். அவர்களில் 20 விழுக்காடு பேர் மிகவும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள். இது ஆரம்ப காலக்கட்டத்தை ஒப்பிடும் போது முற்றிலும் வேறுபட்ட நிலையாகும். தற்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

கரோனாவால் உயிரிழப்போர் விகிதம் அதிகரிக்க என்ன காரணம்?

தற்போது அதிகரிக்கும் இறப்பு விகிதத்தை நாங்களும் கண்காணித்து வருகிறோம். ஹேப்பி ஹைபாக்சியா எனும் நிலையில் 80 விழுக்காடு பேருக்கு கரோனா அறிகுறி வருவதில்லை. 20 விழுக்காடு பேருக்கு அறிகுறிகள் வருகின்றன. அவர்களில் 15 விழுக்காடு பேருக்கு தீவிரமாக இருக்கிறது. 5 விழுக்காடு பேருக்கு மிகவும் தீவிரமாக நோயின் தாக்கம் இருக்கும். தீவிரமாக கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல், சளி போன்ற ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படுவதில்லை. நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் திறன் (எஸ்பிஒ2) வேகம் குறையும்.

ஹேப்பி ஹைபாக்சியா நிலை என்றால் என்ன?

இந்த நிலையில் அவர்களுக்கு மூச்சுத் திணறல், நாடித்துடிப்பு குறைதல் போன்றவை ஏற்படும். ஆனால் கரோனாவில் நாடித்துடிப்பு குறையாது, மூச்சு வாங்குதல் இருக்காது. ஆனால் மூச்சை உள்வாங்கி வெளிவிடும் அளவு மட்டும் தொடர்ந்து குறைந்துகொண்டே இருக்கும். இதை அறியாமல் கரோனா பாதிக்கப்பட்டவர் தொடர்ச்சியாக மாடிக்கு செல்லுதல், அதிகமான வேலைகளை செய்தல் என தன் வாடிக்கையான பணிகளில் ஈடுபடுவார். இதனால் நோயாளியின் ஆக்சிஜன் அளவு குறைந்து திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிடுவார். லேசாக மூச்சு வாங்குதல் என நோயாளி கூறினாலும்கூட திடீரென மூச்சடைப்பு ஏற்பட்டு இறக்க வாய்ப்புள்ளது. இதுதான் கரோனாவிலிருக்கும் சிக்கல், இதைத்தான் ஹேப்பி ஹைபாக்ஸியா என்கிறோம்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை என்னென்ன?

இருமல், சளி உள்ளிட்ட அறிகுறியுடையவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டும். இவர்கள்தான் தீவிர நிலைக்கு செல்கின்றனர். சளி, இருமல், காய்ச்சல் தொடர்ந்து குறையாமல் இருந்தால் அரசு மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும். அவர்கள் பெருந்தொற்றின் நிலைக்கு ஏற்ப தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவார்கள். அந்நோயாளிகளுக்கு LAMP என்ற முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு நுரையீரலுக்குச் செல்லும் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுகிறது. நுரையீரலுக்குச் செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் அடைப்பினை சிகிச்சை செய்து எடுத்து விட்டால் மூச்சுவிடுவதில் சிரமம் குறையும். நுரையீரல் பாதிப்பை குறைப்பதற்கும் மருந்து அளிக்கப்படுகிறது. இதற்கடுத்ததாக புரோன் வென்டிலேசன் முறை பரிந்துரைக்கப்படுகிறது.

கவுந்துபடுத்தால் கரோனாவை வெல்ல முடியுமா?

கவுந்துபடுத்து தூங்கும் முறையை புரோன் வென்டிலேசன் என்கிறோம். நாம் எப்பொழுதும் படுத்து தூங்கும் பொழுது ஒரு புறமாகவோ அல்லது நேராகவோ படுத்து தூங்குவோம். ஆனால் குப்புறப்படுத்து தூங்க மாட்டோம். ஆனால் கவுந்துபடுத்து தூங்கும் முறையில் நுரையீரல்கள் விரிவடைந்து ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகின்றன. இதனால் ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளும் திறன் அதிகரிக்கிறது.

யாருக்கு புரோன் வென்டிலேசன்?

கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளும் திறன் 95 விழுக்காடு இருந்தால் சிக்கல் இல்லை, ஆனால் 92 விழுக்காடு இருந்தால் தீவிர சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்படுவார். அவருக்கு தகுந்த மருந்துகள் அளித்த பின்னர் ஆக்சிஜன் கொடுக்காமல் கவுந்து படுக்க சொல்வோம். அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து சரியாகிவிடுவார். ஆக்சிஜன் எடுக்கும் திறன் 85 விழுக்காடு இருப்பவர்களுக்கு கவுந்து படுக்க சொல்லி சிகிச்சை அளிக்கும் பொழுது நல்ல முன்னேற்றம் அடைகின்றனர்.

வென்டிலேட்டர் இல்லாமல் புரோன் ஆக்சிஜனுக்கு உள்படுத்தும் பொழுது, ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளும் திறன் 92 விழுக்காடில் இருந்து 100 ஆக அதிகரிக்கிறது. கரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கும் முறையிலும் சில மாற்றங்களைச் செய்து உள்ளோம். தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாததால் வேறு வழியில் சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த சிகிச்சை முறையில் நோயாளிகள் குணமடையும் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இது தவிர PLAM என்ற முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.

நோயாளிகளுக்கு என்ன கட்டுப்பாடு?

கரோனா வருவதை தடுப்பதற்காக வீட்டிலேயே இருங்கள் என அறிவுரை கூறுகிறோம். ஒருவேளை அதையும் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் சாதாரண அறிகுறியுடன் இருந்தால், வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும். வீட்டிற்குள் சுற்றக்கூடாது. கரோனா தீவிரமாகி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டால் படுக்கையை விட்டு இறங்கி செல்லக்கூடாது. நன்றாக இருக்கிறோம் எனக்கூறி இறங்கி நடந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கரோனாவால் நுரையீரல் பாதிக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்?

கோவிட்-19 வைரஸ் அதற்கு உரிய செல் ரிசப்டார் (Cell Receptor) மீது தான் அமரும். கரோனா வைரஸ் ஏசிஇ 2 என்ற ரிசப்டார் மீதுதான் அமர்கிறது. மனித உடலில் உறுப்புகளில் நுரையீரலில்தான் இந்த செல்கள் அதிக அளவில் இருக்கின்றன. கரோனா வைரஸ் நுரையீரலை விட மூக்கில்தான் அதிக அளவில் பரவுகின்றன. இந்த வைரஸ்கள் நுரையீரலில் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் மூக்கில் மில்லியன் கணக்கில் இருக்கின்றன. இதனால் மூச்சை இழுக்கும்போது 20 வைரஸ்கள் ஒரு நிமிடத்தில் வெளியில்வரும். பேசும்போது ஒரு நிமிடத்திற்கு 200 வைரஸ்கள் வெளியில் வரும். ஆனால் நீங்கள் இரும்பினால் 200 மில்லியன் வைரஸ் ஒரு முறைக்கு வெளியில் வரும்.

குறைந்தது நான்கு மணி நேரம் அறையில் வைரஸ்கள் இருக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. அப்போது யாராவது உள்ளே வந்தால் நோய் தொற்று ஏற்படும். நோயை உருவாக்கக்கூடிய வைரஸ்கள் நுரையீரலை விட மூக்கில்தான் அதிகளவில் உள்ளது. எனவே தான் நோய்த்தொற்றும், பரவும் வேகமும் அதிகமாக இருக்கிறது.

ஸ்வைன்ப்ளூ வைரஸுக்கும் கோவிட்-19க்கும் என்ன வித்தியாசம்?

ஸ்வைன்ப்ளூ வைரஸ் நுரையீரலில் இருந்தது. அதனால் நோய்த் தொற்றுவது பரவல் குறைவாகவே இருந்தது. நுரையீரல் ஆக்சிஜன் அதிக அளவில் எடுப்பதால், அதில் பாதிப்பு ஏற்பட்டால் நோயின் தீவிரம் அதிகமாகிறது. நுரையீரலிலிருந்து ரத்தம் செல்வது உறைந்து தடைபடுவதால் நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. எனவே தான் உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை கற்றுத் தருகிறோம்.

கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை?

மனிதனுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் மட்டுமே கரோனா பெருந்தொற்று வருகிறது. ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட வேண்டுமென்றால் அவரது உடலுக்குள் குறைந்தது ஆயிரம் வைரஸ்கள் செல்லவேண்டும். அப்போதுதான் நோய் பாதிப்பு ஏற்படும். அதற்குக் குறைவான அளவு வைரஸ்களை உடலுக்குள் செல்லும்போது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி அவ்வைரஸை அழித்துவிடும். நோய் வராமல் தடுப்பதற்கு ஒருவரை மற்றொருரைச் சந்திக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை சந்திக்க நேரிட்டால் இருவரும் முகக்கவசம் அணிந்தபடி, அதிகபட்சமாகவே நான்கு நிமிடம்தான் பேசவேண்டும்.

ஒருவேளை அதிக நேரம் பேச வேண்டிய நிர்பந்தமிருந்தால்....

அப்படியொரு சூழ்நிலையில் இருவருக்கும் இடையே இரண்டு மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். அப்போதும் கூட 45 நிமிடம் வரை பேசினால் போதுமானது. இது தவிர அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். முகக்கவசமும், தகுந்த இடைவெளியும் கட்டாயத்தேவைகள்.

ஹேப்பி ஹைபாக்ஸியா நிலையை எவ்வாறு எளிதில் கண்டறியலாம்?

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்குதான் ஹேப்பிஹைபாக்ஸியா நிலை ஏற்படும். கரோனா வந்தவர்களில் 80 விழுக்காடு பேருக்கு சாதாரண அறிகுறிதான் தென்படுகின்றன. இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் மூச்சுவிடுவதில் பிரச்னை உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்கப்படும். பின்னர் புரோன் போசிஷனிங் முறையில் சிகிச்சை அளித்தால் இரண்டு நாட்களில் மூச்சுவிடுவதில் சிரமம் குறைந்துவிடும். மூச்சுத் திணறல் ஏற்படும் நபர்களுக்கு எட்டு நாள்களுக்கு அது தீவிரமடைகிறது. பத்து நாள்களில் உயிரிழக்க நேரிடுகிறது.

மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை என்பதை எப்படி கண்டறியலாம்?

மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை எப்படி கண்டறியலாம்?

ஒவ்வொரு மனிதனும் மூச்சினை இழுத்து விடக்கூடிய குறிப்பிட்ட நேரமிருக்கிறது. ஒருவர் மூச்சினை இழுத்து தம் கட்ட வேண்டும். அவர் குறைந்தது 30 முதல் 37 வினாடிகள் மூச்சினை இழுத்து தம் கட்ட வேண்டும். ஒரே மூச்சில் அவர் எத்தனை எண்களை என்கிறார் என்பதை பொறுத்து கண்டறியலாம். இதனடிப்படையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதா என்பதை கண்டறிய முடியும். லேசான உடற்பயிற்சி அதாவது நடைபயிற்சி உள்ளிட்டவற்றை செய்யும்போது மூச்சு வாங்கினால் அதனை வைத்துக் கண்டறிய முடியும்.

இதையும் படிங்க: வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவே சிறந்தது... உணவு குறித்த மருத்துவரின் வழிகாட்டுதல்கள்!

Last Updated : Jun 10, 2020, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.