இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஐ.நா சபை மனித உரிமைகள் பேரவையில் இன்று(மார்ச்.23) நடைபெறகிறது.
முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் - இந்தியா - இங்கிலாந்து முதல் ஆட்டம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று(மார்ச்.23) நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் காலவரையின்றி கல்லூரிகள் மூடல்
தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இன்று(மார்ச்.23)முதல் கல்லூரிகள் மூடப்படுவதாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலில் 4ஆவது முறையாக பொதுத்தேர்தல்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் 4ஆவது முறையாக இஸ்ரேலில் இன்று (மார்ச் 23) பொதுத்தேர்தல் நடக்கிறது. கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.