- தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு
கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வர இருக்கிறது.
- முழு ஊரடங்கு: 103 சோதனைச் சாவடிகள் அமைப்பு
எந்தவித தளர்வுகளுமின்றி இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வர இருப்பதால் சென்னையில் 103 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட உள்ளனர்.
- தமிழ்நாட்டின் முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி ஓய்வு!
தமிழ்நாட்டைச் சேர்ந்த, முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி ஆர். பானுமதி இன்று ஓய்வுபெறுகிறார். இவர் கொலிஜியத்தில் (உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியைத் தேர்வு செய்யும் குழு) இடம்பெற்ற இரண்டாவது பெண் நீதிபதியாவார். திருச்சி பிரேமானந்தா சாமியார் வழக்கில் இவர் வழங்கிய தீர்ப்பு பெரிதாகப் பேசப்பட்டது.
- தனிநபர் பயிற்சியைத் தொடங்கவுள்ள 9 கிரிக்கெட் வீரர்கள்!
கரோனா காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் போட்டிகள் தொடங்கவிருப்பதால், வீரர்கள் தனிநபர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், வங்கதேசத்தைச் சேர்ந்த முஷ்பிகுர் ரஹிம், இம்ருல் கயஸ், முகம்மது மிதுன், ஷபியுல் இஸ்லாம், சையத் அகமத், நசும் அகமத், நுருல் ஹசன், மஹதி ஹசன், நயிம் ஹசன் ஆகியோர் தனிநபர் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.
- வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.