ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @9AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

@9AM
@9AM
author img

By

Published : Jun 22, 2021, 9:01 AM IST

Updated : Jun 22, 2021, 9:22 AM IST

1.முதலாவது கூட்டத்தொடரின் இரண்டாவது நாள்

தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று(ஜுன் 22) அண்மையில் மறைந்த முக்கியப் பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

2.சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்துசெய்யக் கோரிய வழக்கு: இன்று விசாரணை

சிபிஎஸ்இ தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் (ஜூன் 22) விசாரணைக்கு வருகிறது.

3.மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4.உணவகத்தைச் சூறையாடிய கும்பல்: சிசிடிவி மூலம் விசாரணை

வேளச்சேரியிலுள்ள உணவகத்திற்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டை, பீர் பாட்டில், கற்களால் உணவகத்தைச் சூறையாடிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

5.சேலத்தில் இன்று 30,500 தடுப்பூசி செலுத்தப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலத்தில் தடுப்பூசித் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தகவல் தெரிவித்துள்ளார்.

6.ஹைதராபாத்தில் 2,000 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவிலிருந்து புனேவுக்கு ரகசியமாகக் கொண்டுசெல்லப்பட்ட 2 டன் கஞ்சா பொட்டலங்களை ஹைதராபாத் புறநகரில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் பறிமுதல்செய்துள்ளது

7.2021க்குள் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கத் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு

ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனத்தை 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முனைப்புக் காட்டியுள்ளது.

8.சினிமா படம் பார்த்து ஆடி காரை திருடிய இளைஞர்கள்: ஆப்பு வைத்த ஜிபிஆர்எஸ் கருவி!

காஞ்சிபுரத்தில் சினிமா படத்தைப் பார்த்து விலை உயர்ந்த ஆடி காரை திருடிய இளைஞர்கள், காரிலிருந்த ஜிபிஆர்எஸ் கருவி மூலம் சிக்கினர்.

9.வெற்றியோ... தோல்வியோ... சிறு சிரிப்பில் கடப்பவர்!

கடின பயணத்தில் 47ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

10. ஆசிட் காயத்திலிருந்து யோகா எப்படி மீளவைத்தது? - நினைவுகூரும் கங்கனா

நடிகை கங்கனா தனது சகோதரி ரங்கோலி திராவக வீச்சால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து எப்படி மீண்டுவந்தார் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Jun 22, 2021, 9:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.