பாஜக முக்கிய பிரமுகர்களுடன் மோடி ஆலோசனை:
உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய பாஜக பிரமுகர்களுடன் பிரதமர் மோடி தனது இல்லத்தில் இன்று (ஜூலை 06) ஆலோசனை நடத்தவுள்ளார். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதலமைச்சர் ஆலோசனை:
கட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இடைக்கால காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் இன்று (ஜூலை 06) ஆலோசனை நடத்துகிறார்.
திருவாரூர் செல்லும் முதலமைச்சர்:
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவ கட்டடத்தை இன்று (ஜூலை 06) திறந்து வைக்கவுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம்:
தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு இன்று (ஜூலை 06) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூலை 06) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.