ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10am

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-10-am
etv-bharat-top10-news-10-am
author img

By

Published : May 27, 2020, 10:04 AM IST

விவசாய நிலங்களில் ஈக்கள் போல் மொய்த்த 'பாலைவன வெட்டுக்கிளிகள்'

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம், விவசாய நிலங்களை அபகரித்துள்ளது.

நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் - ஹர்தீப்சிங் புரி

டெல்லி: நாளுக்கு நாள் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு வந்துவிட்டது மெய்நிகர் நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் முதல்கட்டமாகச் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் இணையத்தில் அபராதம் செலுத்த ஏதுவாக மெய்நிகர் நீதிமன்றங்களை உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் காணொலி காட்சி மூலமாகத் தொடங்கிவைத்தார்.

காடுவெட்டி குருவின் மகனுக்கு அரிவாள் வெட்டு!

அரியலூர்: மறைந்த காடுவெட்டி குருவின் மகன், மருமகன் உள்ளிட்டோர் அரிவாளால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டு: ஹய்தி கால்பந்து சம்மேளனத் தலைவர் இடைநீக்கம்!

தேசிய கால்பந்து வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, ஹய்தி கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் யீவ்ஸ் ஜீன் பார்ட் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சின்னத்திரை படப்பிடிப்புக்கு 50% ஊழியர்களை அனுமதிக்க கோரிக்கை

சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புக்கு 50 விழுக்காடு ஊழியர்களை அனுமதிக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்தார்.

சேவையை மீண்டும் தொடங்கிய ஓலா!

டெல்லி: ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஓலா வாடகை வண்டி சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இனி ஓலாவைப் பயன்படுத்தி விமான நிலையங்களுக்குச் செல்லலாம் என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு கரோனா: தொழிற்சாலையை மூடிய நோக்கியா!

நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றிய 56 ஊழியர்களுக்குச் சோதனை செய்ததில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேருக்கும், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 22 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காவல் வாகனத்தில் ஏறி சல்மான்கானைப் போல 'டிக் டாக்' செய்த இளைஞர்!

காசியாபாத்: 'தபாங்' திரைப்பட நடிகர் சல்மான்கானைப் போல, டிக் டாக் செய்த இளைஞரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

2ஆம் உலகப்போரில் மாயமான டாக் டேக் கண்டுபிடிப்பு!

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டில் நடந்த புனரமைப்புப் பணியின்போது, இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய ஒரு ராணுவ வீரரின் அடையாள அட்டை கண்டறியப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.