ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm

author img

By

Published : Jul 16, 2021, 1:10 PM IST

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்...

Top 10 news
Top 10 news

1.மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு பாதிப்புக்குள்ளாகும் - திருமாவளவன்

மேகதாதுவில் அணை கட்டினால் எதிர்காலத்தில் தமிழ்நாடு கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூலை 16) செய்தியாளர்களிடம் கூறினார்.

2. சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

ஆடி பிறப்பை முன்னிட்டு சபரிமலை கோயில் இன்று (ஜூலை 16) மாலை திறக்கப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) முதல் 5 நாள்களுக்கு தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

3.பாலியல் துன்புறுத்தல்- பாஜக வழக்குரைஞர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு!

கொடுங்கையூரில் தாய், மகள்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பாஜக வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

4. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு 19ஆம் தேதி வெளியாகிறது?

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த 12ஆம் வகுப்பு மாணாக்கர்களின் தேர்வு முடிவுகளை 19ஆம் தேதி காலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

5. ராமநாதபுரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு டெங்கு- அச்சத்தில் மக்கள்

ராமநாதபுரத்தில் 6 வயது , 7 மாத ஆண் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

6. 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு!

ஆந்திராவை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவலர்கள் கைது செய்தனர்.

7. விபரீதம் ஆன வேடிக்கை- திபுதிபுவென கிணற்றுக்குள் விழுந்த 40 பேர்!

மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியின்போது கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 40 பேர் கிணற்றுக்குள் விழுந்தனர். இதில், நான்கு பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளனர்.

8. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி: இளம்பெண் உள்பட இருவருக்கு சிறை

ராமநாதபுரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 6 பேரிடம் 63 சவரன் நகைகள், சுமார் 10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த இளம்பெண் உள்ளிட்ட இருவரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

9. இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்காக இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!

டோக்கியோ ஒலிம்பிக்கிற்குச் செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

10. மீண்டும் கதையின் நாயகனாக கருணாஸ்?

நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'ஆதார்' திரைப்படத்தின் பூஜை இன்று (ஜூலை 16) நடைபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.