1. SPECIAL: அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது: மாநகராட்சி
அரும்பாக்கத்தில் எஞ்சிய மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி, மறுகுடியமர்வு செய்யும்வரை ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது என சென்னை மாநகராட்சித் தெரிவித்துள்ளது.
2. பி.வி. சிந்துவிற்கு குவியும் பாராட்டுகள்; ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதை அடுத்து, அவருக்கு இந்திய குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
3. ட்விட்டர் ஸ்பேஸ் அப்டேட் - இனி எளிதாக ஷேர் செய்யலாம்
ட்விட்டர் ஸ்பேஸ் புது அப்டேட் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தகவல்களை எளிதாக பகிரவும், துரிதமாக ஒலியை தேடவும் முடியும்.
4. வென்றார் சிந்து; இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
5. ஆடவர் ஹாக்கி: 41 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதியில் இந்தியா!
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 1980 மாஸ்கோ ஒலிம்பிக் தொடருக்கு பிறகு இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
6. குடியரசு தலைவர் வருகை - முழு உஷார் நிலையில் காவலர்கள்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வரவுள்ளதையடுத்து 5,000 காவலர்களுடன் ஐந்து அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
7. 500 ரூபாய் மீனுக்கு 100 ரூபாய் பெட்ரோல் இலவசம் - கலக்கும் விற்பனை
500 ரூபாய்க்கு மேல் மீன் வாங்கினால் 100 ரூபாய்க்கான பெட்ரோல் கூப்பன் இலவசம் என்று மதுரையில் உள்ள தனியார் மீன் விற்பனை மையம் அறிவித்துள்ளது.
8. தங்கப் பதக்கத்தை நோக்கி செல் - லவ்லினாவுக்கு மணல் சிற்பத்தில் பாராட்டு!
ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்தியாவின் லவ்லினா, அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளார். இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, பத்மஸ்ரீ விருதுபெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன பட்நாயக், ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.அதில், CONGRATS LOVLINA. GO FOR GOLD " என எழுதியுள்ளார்.
9. ஜான்குமாருக்கு புதுச்சேரி பாஜக தலைவர் வாய்ப்பு?
சிறுபான்மையினரைக் கவரும் விதத்தில், ஜான் குமாருக்கு புதுச்சேரி பாஜக தலைவர் பதவி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
10. தடையை மீறி செயல்பட்ட பிரபல ஜவுளிக்கடை: எச்சரித்த மாநகராட்சி
சென்னையில் தடையை மீறி ஜவுளிக்கடைகள் செயல்பட்டால் கடைகளுக்குச் சீல் வைத்துவிடுவோம் என மாநகராட்சி அலுவலர்கள் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.