’தமிழ்நாடு முன்னேற ஏழு இலக்குகள்’ - மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: மாநிலம் முன்னேற அனைவருக்கும் உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் உள்ளிட்ட ஏழு இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடுத்த பத்து ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 11,815 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் நேற்று (ஜூன்.14) புதிதாக 11 ஆயிரத்து 815 பேருக்கு கரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், 23 ஆயிரத்து 207 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
’சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள்’ - ஓபிஎஸ் கோரிக்கை
சென்னை: கரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக பனிப்போர்: சசிகலா ஆதரவு நிலைப்பாடுக்கு செல்கிறாரா ஓபிஎஸ்?
கொங்கு மண்டலத்தின் ஆதிக்கத்தைக் குறைக்க சசிகலாவின் வருகை அவசியம் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நினைக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மாற்றுத் திறனாளி காதலனுடன் சென்ற தங்கை: காதலனின் பெற்றோரைத் தாக்கிய அண்ணன்!
சென்னை: கோட்டூர்புரம் அருகே தங்கையை அழைத்துச் சென்ற காதலனின் தாய், தந்தையை கத்தியால் வெட்டிய அண்ணன், அவரது கூட்டாளிகளை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி மின்பாதை ஆய்வாளர் உயிரிழப்பு: திட்டமிட்ட கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு!
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கிய மின்பாதை ஆய்வாளர், மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
30 ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரத்தில் 2ஆம் போக சாகுபடி!
ராமநாதபுரம்: 30 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் போக சாகுபடி செய்ய வேளாண்துறை அலுவலர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் எடுத்த முயற்சி நல்ல பலனையும், விவசாயிகளிடம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பை மேம்படுத்த இந்திய ரயில்வேக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை - அரசு ஒப்புதல்!
ரயில் நிலையங்கள், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகியவற்றுக்காக, 5 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை இந்திய ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை ஐஎஸ் பயங்கரவாதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
சென்னை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
விவாடெக்கில் நாளை பிரதமர் நரேந்திர மோடி உரை!
விவாடெக் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்.