ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம்-TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 செய்திச் சுருக்கம்..

etv bharat top ten news nine am
etv bharat top ten news nine am
author img

By

Published : May 17, 2021, 9:51 AM IST

ரெம்டெசிவிர் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்படமாட்டாது - காவல் துறை

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படவிருப்பதால், நேரு ஸ்டேடியத்தில் இன்று(மே.17) முதல் ரெம்டெசிவிர் பெற மக்கள் வர வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

நடிகர் நிதிஷ் வீரா கரோனா தொற்றால் காலமானார்

'புதுப்பேட்டை', 'அசுரன்', 'வெண்ணிலா கபடி குழு', 'காலா' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நிதிஷ் வீரா கரோனா தொற்று காரணமாக காலமானார். அவருக்கு வயது 45.

கரோனா பரவலைத் தடுக்க அனைத்துக் கட்சி குழு: தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுப்பதற்காகவும்; அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் முதலமைச்சர் தலைமையில் 13 கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

உயர் மின் கோபுரம் பிரச்னை தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு

உயர் மின் கோபுரம் பிரச்னை குறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

கரோனா பரவலைத் தடுக்க வேப்பிலை தோரணம் கட்டிய கிராம மக்கள்!

ஈரோடு: கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த கிராமம் முழுவதும் பொதுமக்கள் வேப்பிலை தோரணம் கட்டியுள்ளனர்.

‘வட்டார மருத்துவ அலுவலரை இடம் மாற்ற வேண்டும்’: எம்எல்ஏவிடம் பொதுமக்கள் வேண்டுகோள்!

ராமநாதபுரம்: ஆர்.எஸ். மங்கலம் வட்டார மருத்துவ அலுவலரை இடமாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் திருவாடான சட்டப்பேரவை உறுப்பினர் கரு. மாணிக்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு ஊரடங்கை மீறி பூக்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்!

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் முழு ஊரடங்கை மீறி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பணை செய்த கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த அலுவலர்கள், பூக்கள், தராசுகளை பறிமுதல் செய்தனர்.

இறைச்சிக் கடைக்கு சீல்: தப்பியோடிய உரிமையாளருக்கு போலீஸ் வலை!

வேலூர்: காட்பாடியில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட இறைச்சி கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். தப்பியோடிய கடை உரிமையாளரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும் குள்ள மூங்கில்!

மலைகளில் மனிதனுக்குப் பயன் தரும் எண்ணற்ற பொருள்கள் உள்ளன. அவைகள் சரியாக பாதுகாக்கப்படாததால், அதனால் நமக்கு கிடைக்கும் பலன்களை இழந்து வருகிறோம். அப்படியான மலைப்பொருட்களில் ஒன்று ரிங்கல். மூங்கில் குடும்பத்தைச் சேர்ந்த ரிங்கல் உத்தரகாண்டில் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. உத்தரகாண்டில் இதனை குள்ள மூங்கில் என்று அழைக்கின்றனர். கரோனா தொற்று காலத்தில் பணியை இழந்து வரும் இளைஞர்களுக்கு குள்ள மூங்கில் வேலைவாய்ப்பை வழங்குகிறது.

2டிஜி கரோனா தடுப்பு மருந்தின் முதல் பேட்ச் இன்று விநியோகம்!

டி.ஆர்.டி.ஓ தயாரித்துள்ள 2-டிஜி கரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பேட்ச் விநியோகத்தை, இன்று (மே.17) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.