ETV Bharat / state

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

etv bharat top ten news five pm
etv bharat top ten news five pm
author img

By

Published : Apr 30, 2021, 5:45 PM IST

இலை உதிர்ந்து சூரியன் உதிக்கும்! - ஈடிவி பாரத் சர்வே முடிவுகள்!

ஈடிவி பாரத் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 133 இடங்களையும், அதிமுக கூட்டணி 89 இடங்களையும், பிற கட்சிகள் 12 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

'மதுரை மாஸ்டர் பிளான் திட்டம்' வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை மாஸ்டர் பிளான் திட்டத்தை நகர்ப்புற திட்ட விதியை பின்பற்றி மாற்றி அமைக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் கே.வி ஆனந்த் உடல் தகனம்!

சென்னை: அயன், கோ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால், இவரது உடல் உறவினர்கள் பார்வைக்கு ஐந்து நிமிடம் மட்டும் வைக்கப்பட்ட பின் தகனம் செய்யப்பட்டது.

கரோனாவால் உயிரிழந்த தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்த மகள்கள்

வாரணாசி: வாரணாசியில் உள்ள மணிகர்னிகா காட்டில் கரோனாவால் உயிரிழந்த தந்தையை மூன்று மகள்கள் தகன மைதானத்திற்கு தோளோடு தோள் சுமந்து கொண்டு சென்று அவரது உடலுக்கு இறுதி சடங்குகளை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உழைப்பவரின் கனவுகள் நனவாக மே தின வாழ்த்துகள் - டிடிவி தினகரன்

சென்னை: உழைப்பவரின் கனவுகள் நனவாக மே தின வாழ்த்துகள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் முகக்கவசம் - மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு

மதுரை: கரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டருக்கான பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் நானோ தொழில்நுட்பத்தில் ஆக்சிஜன் முகக்கவசத்தைக் கண்டுபிடித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆரோக்கியதாஸ் அசத்தியுள்ளார்.

கரூரில் வணிக நிறுவனங்கள் மூடல்: வாழ்வாதாரம் பாதிப்பில் தொழிலாளர்கள்

கரூரில் பெரிய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி கிருஷ்ணசாமி வழக்கு: தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சென்னை: மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

`கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு`-அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: கருத்துக் கணிப்பு என்பது எந்த காலத்திலும் எடுபடாத ஒன்று, அது கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கே.வி. குப்பம் தொகுதி தேர்தல் அலுவலராக காமராஜ் நியமனம்

வேலூர்: கே.வி. குப்பம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாற்று அலுவலராக மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் காமராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.