துளசி வாண்டையார் காலமானார்
காங்கிரஸ் முன்னாள் எம்.பி., கே.துளசி வாண்டையார் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.
அருண்ராஜா காமராஜாவின் மனைவி கரோனா தொற்றால் உயிரிழப்பு!
இயக்குநர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 38.
பதவியேற்ற சில நாள்களில் கரோனாவால் உயிரிழந்த தலைமை நீதிபதி!
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட தலைமை நீதிபதி நீஷ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பறவை கோணம்: வெறிச்சோடிய துறைமுக மீன்இறக்குமதி தளம்!
முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து கடைகளையும் மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இறைச்சி, மீன் கடைகளை காலை 10 மணி வரை திறக்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், எப்போதும் பரபரப்பாக இருக்கும் கடலூர் மீன்பிடித்துறைமுக பகுதி, ஆள்ளரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தெலங்கானாவிலிருந்து வந்த 1,317 மெட்ரிக் டன் புழுங்கல் அரிசி!
தெலங்கானா மாநிலத்திலிருந்து 1,317 மெட்ரிக் டன் புழுங்கல் அரிசி (26,500 மூட்டைகள்) நேற்று (மே16) மயிலாடுதுறை ரயில் நிலையத்தை வந்தடைந்தன.
உருமாற்றமடைந்த கரோனா வைரஸ்களையும் கோவாக்சின் தடுக்கும்!
உருமாற்றமடைந்த கரோனா வைரஸ்களை தடுக்கும் திறன் கோவாக்சினுக்கு இருப்பதாக பாரத் பயோடேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அலட்சியமாக நடந்துகொள்ளும் மத்திய அரசு - வல்லுநர் குழுவிலிருந்து விலகிய மூத்த வைராலஜிஸ்ட்!
கரோனா தொற்றின் இரண்டாம் அலை விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்த, மூத்த வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல், அரசின் வல்லுநர் குழுவிலிருந்து விலகியுள்ளார்.
கரோனா பரவல்: புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில் தரிசனம் ரத்து!
புகழ்பெற்ற ஜெகநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பொது தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வாயால் தூரிகையைக் கவ்வி சோனுசூட்டின் முகத்தை வரைந்த ரசிகன்!
ஆந்திரா: பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர், தன் வாயால் தூரிகையையைக் கவ்விக் கொண்டு சோனுசூட்டின் முகத்தை வரைந்து உள்ளார். ஒவியத்தை தலைகீழாக வரை ஆரம்பித்து வண்ணகள் தீட்டி, அந்த படத்தை திருப்பி காண்பித்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
குஜராத்திலிருந்து 280 கி.மீ தொலைவில் டவ்-தே புயல்; 1.50 லட்சம் பேர் வெளியேற்றம்!
டவ்-தே புயல் நாளை (மே17) காலை குஜராத்தின் போர்பந்தர் - மஹூவா இடையே கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.