ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

author img

By

Published : Oct 3, 2021, 9:20 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

1. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஷாருக்கானின் மகன்!

சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் பிடிபட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர் உள்பட மூவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

2. பாலியல் தொல்லை - ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

3. ஃபெப்சி தொழிலாளர்கள் வீடு கட்ட ரூ.1 கோடி நன்கொடை; விஜய்சேதுபதி ராக்ஸ்!

நடிகர் விஜய் சேதுபதி ஃபெப்சி தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்காக ரூ. 1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது பொதுவெளியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4. இருளர் இன மக்களுக்கு ’பழங்குடியினர் சான்று’ வழங்கிய அமைச்சர் சா.மு.நாசர்

திருத்தணி அருகே 45 இருளர் இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

5. பழச்சாறு என நினைத்து மது அருந்திய சிறுவன்... குற்ற உணர்ச்சியில் மயங்கிய தாத்தா... அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்!

வேலூரில் பழச்சாறு என்று நினைத்து மதுவைக் குடித்த சிறுவனும், அம்மதுவை வாங்கிய சிறுவனின் தாத்தாவும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

6. அரசு சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பு: திமுக நிர்வாகிகள் மீது புகார்!

திமுக நிர்வாகிகள் அரசு சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, மாநிலத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

7. ஆசிரியர் ராஜகோபாலின் குற்றப்பத்திரிக்கையில் இருப்பது என்ன?

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலிடம் சுமார் 250-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகவும், நேரடியாகவும் பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

8. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் பல கிலோ மீட்டர் தொலைவு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

9. KKR vs SRH: டாஸ் வென்ற ஹைதராபாத்; கொல்கத்தா பந்துவீச்சு

கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.

10. 'பிக் பாஸ் சீசன் 5' நிகழ்ச்சி படப்பிடிப்பு தள புகைப்படத் தொகுப்பு!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.