ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்...

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 26, 2021, 9:26 PM IST

1. காபூல் குண்டுவெடிப்பு: இருவர் உயிரிழப்பு; ரஷ்யா உறுதி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் வெளியே நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் ஒன்று மனித வெடிகுண்டு என்றும், மக்கள் நெருக்கம் அதிகமிருந்ததால் உயிரிழப்புகள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

2. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளுக்கான இடைவெளி குறைகிறது - அரசு தகவல்

கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு தவணைகளுக்கான இடைவெளி காலம் குறையலாம் என்று மத்திய அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3. பாஜக என்னும் பெரிய கட்சியின் எளிய 'தொண்டர்' - மதனின் ஆடியோவுக்குப்பின் அண்ணாமலை போட்ட ட்வீட்

ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட ஆடியோவில், அண்ணாமலை குறித்த பல அறியப்படாத தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்தார். இது அண்ணாமலையின் அரசியல் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையில் மதனின் ஆடியோவுக்குப்பின் அண்ணாமலை போட்ட ட்வீட் சமூக வலைதளத்தில் வெகுவாக ரீட்வீட் செய்யப்பட்டுவருகிறது

4. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போலி சிங்கம் - மதன் ரவிச்சந்திரன் விமர்சனம்

கே.டி.ராகவன் விவகாரத்தில் சர்ச்சையான காணொலியை வெளியிடக் கூறிய அண்ணாமலை ஒரு போலி சிங்கம் என ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

5. ஒடுக்கப்படும் மக்களின் குரல் ஒலிக்க தடை; கோபத்தில் கவிஞர் சுகிர்தராணி

மத்திய அரசு சமுதாய மாற்றத்தை விரும்பவில்லை. புதிய கல்விக் கொள்கை மூலம் சமுதாயத்தை பின்னோக்கி எடுத்துச் செல்ல பார்க்கிறது. அவர்கள் அடக்க அடக்க இது பீறிட்டுத் தான் எழும். இதனால் அது அடங்கிப் போகாது என்கிறார் சுகிர்தராணி.

6. தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டது குறித்து டெல்லி பல்கலை விளக்கம்

தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

7. கொடைக்கானலில் மாமியார் - மருமகள் கோயில் பற்றிய தகவல்கள்

கொடைக்கானல் மலைப்பகுதி கிராமத்தில் அமைந்துள்ள மாமியார் - மருமகள் கோயிலைப் பற்றிக் காண்போம்.

8. கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் இன்று 1559 பேருக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 559 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

9. உலகின் மிக உயர பிரமாண்ட ராட்டினம்

துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய, மிக உயரமான ராட்டின சக்கரம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. துபாயின் ப்ளூவாட்டர்ஸ் தீவில் அமைந்துள்ள இந்த ராட்டினத்திற்கு ஐன் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் உயரம் 820 அடி (250 மீ). இதற்கு முன்னதாக, லாஸ் வேகஸில் உள்ள 'ஹை ரோலர்' ராட்டினம் உலகின் மிக உயர ராட்டினமாக இருந்தது. இதன் உயரம் 550 அடி (167.6 மீ).

10. சருமத்தை மெருகூட்டும் வைட்டமின் ஈ!

வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இன்றியமையாததாக கருதப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.